Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 22)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்
வெள்ளைப் பரிமுகர் தேசிகராய் விரகால் அடியோம் உள்ளத்து எழுதியது ஓலையில் இட்டனம் யாம் இதற்கென் கொள்ளத் துணியினும் கோது என்று இகழினும் கூர் மதியீர் எள்ளத்தனை உகவாது இகழாது எம் எழில் மதியே
– வெண்மையான குதிரையாக அவதரித்த ஸ்ரீஹயக்ரீவன், எம்முடைய ஆசார்யனாக அவதாதம் செய்து, தகுந்த உபதேசம் என்னும் எழுதுகோல் மூலமாக எம்முடைய உள்ளத்தில் எழுதியவற்றை, நாம் இந்த நூலில் எழுதினோம். ஆகவே இந்த நூலில் என்ன குற்றம் உள்ளது (அல்லது நாம் இவ்விதம் எழுதியதில் என்ன குற்றம் உள்ளது)? கூர்மையான அறிவு கொண்டவர்களே! இந்த நூலை ஏற்றுக் கொண்டாலும் எமது அழகான மனமானது சிறிதளுவும் மகிழ்வில் துள்ளாது; இதனை ஏற்காமல், குற்றம் உள்ளதாக இகழ்ந்தாலும், அவர்களை எமது அழகான மனமானது சிறிதளுவும் இகழாது.