Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 21)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்

வானுள் அமர்ந்தவருக்கும் வகுந்த வரும் நிலைகள் தான் உளனாய் உகக்கும் தரம் இங்கு நமக்கு உளதே கூன் உள நெஞ்சுகளால் குற்றம் எண்ணி இகழ்ந்திடினும் தேனுள பாத மலர்த் திருமாலுக்குத் தித்திக்குமே

– தேவர்கள் மற்றும் நித்யஸூரிகள் ஆகியவர்களுக்குக் கூட இந்த நூலில் கூறப்பட்ட இருப்புகள் மிகவும் அரியதாகக் கிடைக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் அத்தகைய இருப்புகள் நமக்கு உள்ளதாகவும், இப்படிப்பட்ட நிலையானது பொருந்தியுள்ளவர்களைக் கண்டு மகிழும்படியான பெருமை மிக்க இயல்பானது நமக்கு உள்ளதாகவும் நாம் திகழ்கிறோம். தாழ்ந்த எண்ணம் கொண்டவர்கள் இந்த நூலிலும் நம்மிடமும் குற்றங்கள் உள்ளது என்று எண்ணித் தூற்றினாலும், இந்த நூலானது தேன் நிரம்பிய தாமரை போன்ற திருவடிகளைக் கொண்ட ஸர்வேச்வரனுக்கு மகிழ்வையே உண்டாக்கும்.