Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 19)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்
இது வழி இன்னமுது என்றவர் இன்புலன் வேறு இடுவார் இது வழியாம் அலவென்று அறிவார் எங்கள் தேசிகரே இது வழி எய்துக என்று உகப்பால் எம் பிழை பொறுப்பார் இது வழியா மறையோர் அருளால் யாம் இசைந்தனமே
– பலராலும் இனிமையானது என்று கொண்டாடப்படும் அற்பமானவற்றை விலக்கி வைப்பவர்களும்; பகவத் க்ருபையே மோக்ஷ வழி என்றும், மற்றவை ஏதும் அல்ல என்றும் அறிபவர்களும் ஆகிய உயர்ந்த ஆசார்யர்களே, “இங்கு கூறப்பட்ட ப்ரபத்தி வழியில் நிலையாக நடப்பீர்களாக” என்று அனைவருக்கும் உபதேசிப்பதில் மகிழ்கிறார்கள். அதன் விளைவாக எங்களுடைய அனைத்து பிழைகளையும் பொறுத்துக் கொண்டு, இங்கு கூறப்பட்ட வழியே இனிமையான அமிர்தம் ஆகும் என்று உபதேசித்தவர்கள் அவர்களே ஆவர். எனவே வேதங்களின் வழி நிற்கின்ற அவர்களுடைய க்ருபையால், இந்த வழியே சிறந்தது என்று நாங்கள் ஏற்கிறோம்.