Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 17)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்

ஆஸ்திக்யவாந் நிசித புத்தி: அநப்யஸூயு: ஸத் ஸம்ப்ரதாய பரிசுத்த மநா: ஸத் அர்த்தா ஸங்கேத பீதிரஹித: ஸத்ருணேஷு அஸக்த: ஸத் வர்த்தநீம் அநுவிதாஸ்யதி சாச்வதீம் ந:

– ஆஸ்திகனாகவும், பொறாமை அற்றவனாகவும், உயர்ந்த ஸம்ப்ரதாயம் காரணமாகப் பரிசுத்தமான மனம் கொண்டவனாகவும், சிறந்த பொருள்களையே விரும்புபவனாகவும், அவசியமற்ற கட்டுப்பாடுகளுக்கு அச்சம் கொள்ளாதவனாகவும், துரும்பு போன்ற தாழ்ந்த பலன்களில் ஈடுபாடு இல்லாதவனவாகவும் உள்ள ஒருவன், நம்முடைய நித்யமான இந்த நூலில் கூறப்பட்டுள்ள சிறந்த கருத்துக்களை எப்போதும் பின்பற்றுவான்.