Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 16)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்

செப்பச் செவிக்கு அமுது என்னத் திகழும் செழுங்குணத்துத் தப்பு அற்றவருக்குத் தாமே உகந்து தருந்தகவால் ஒப்பற்ற நான்மறை உள்ளக் கருத்தில் உறைத்து உரைத்து முப்பத்து இரண்டு இவை முத்தமிழ் சேர்ந்த மொழித்திருவே

– உயர்ந்த குணங்களில் சற்றும் பிறழாத அதிகாரிகள் விஷயத்தில் ஸர்வேச்வரனும் அவனுடைய அடியார்களும் தாங்களாகவே மகிழ்வுடன் அளிக்கின்ற கருணையால், ஈடில்லாத நான்கு வேதங்களுடைய ஆழ்பொருளில் நன்றாக பரிசயம் செய்து உரைக்கப்பட்டவையும், கூறப்படும்போது காதுகளுக்கு அமிர்தம் என்று உரைக்கும்படியாகத் திகழ்பவையும் ஆகிய இந்த முப்பத்து இரண்டு பாசுரங்களும், மூன்றுவகையான தமிழுக்கு ஏற்ற அலங்காரம் ஆகும்.