Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 15)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்
நிர்விஷ்டம் யதிஸார்வபௌம வசஸாம் ஆவ்ருத்திபிர் யௌவநம் நிர்தூத இதர பாரதந்த்ர்ய நிரயா நிதா: ஸுகம் வாஸரா: அங்கீக்ருத்ய ஸதாம் ப்ரஸத்திமஸதாம் கர்வ: அபி நிர்வாபித: சேஷ ஆயுஷி அபி சேஷி தம்பதி தயா தீக்ஷாம் உதீக்ஷாமஹே
– யதிராஜருடைய நூல்களைக் கற்பதில் இளமைக்காலம் நன்றாகக் கழிந்தது. மற்றவர்களுக்கு வசப்பட்டிருத்தல் என்பதான நரகம் கழிந்த நாள்களும் இன்பமாகவே கழிக்கப்பட்டன. சான்றோர்களுடைய அனுக்ரஹத்தைப் பெற்ற பின்னர், மற்ற மதங்களுடைய செருக்கும் ஒடுக்கப்பட்டது. இனி உள்ள காலங்களில், நம்முடைய எஜமானர்களாகிய திவ்யதம்பதிகளுடைய கருணையால் உண்டாகும் ஸங்கல்பத்தை எதிர்நோக்கி நிற்கிறோம்.