Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 12)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்
இந்த நூலைக் குறித்து உரைத்தல்
இதி யதிராஜ மஹாநஸ பரிமள பரிவாஹ வாஸிதாம் பிபத விபுத பரிஷத் நிஷேவ்யாம் வேதாந்த உதயந ஸம்ப்ரதாய ஸுதாம்
– இப்படியாக இதுவரை கூறப்பட்டதும், எம்பெருமானாருடைய திருமடைப்பள்ளியின் பரிமளத்தைப் பெற்றதும், அனைத்தும் அறிந்தவர்களால் அனுபவிக்கும் தகுதி கொண்டதும், வேதாந்த சாஸ்த்ரத்தின் உதயநராக உள்ள திருமடைப்பள்ளியாச்சானுடைய ஸம்ப்ரதாயம் கொண்டதும் ஆகிய அமிர்தத்தைப் பருகுவீர்களாக.