Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 10)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்
பூர்வாசார்யர்களைப் பின்பற்றினால் கிட்டும் நன்மைகள்
மூலம் – “ததோ மஹதி பர்யங்கே மணிகாஞ்சந சித்ரிதே | ததர்சி க்ருஷ்ணமாஸீநம் நீலம் மேராவிவாம்புதம் || ஜாஜ்வல்யமாநம் வபுஷா திவ்யாபரண பூஷிதம் | ப்ரீதகௌசேய ஸம்விதம் ஹேம்நீவோபசிதம் மணிம் || கௌஸ்துபேந ஹ்யுர:ஸ்தேந மணிநா அபிவிராஜிதம் | உத்யதேவோதயம் சைலம் ஸூர்யேநாப்தம் கிரீடிநம் || நௌபம்யம் வித்யதே தஸ்ய த்ரிஷு லோகேஷு கிஞ்சந ||”, “தம் வைச்ரவண ஸங்காசம் உபவிஷ்டம் ஸ்வலங்க்ருதம் | ததர்ச ஸூத: பர்யங்கே ஸௌவர்ணே ஸோத்தரச்சதே || வராஹருதிராபேண சுசிநா ச ஸுகந்திநா | அநுலிப்தம் பரார்த்யேந சந்தநேந பரந்தபம் || ஸ்திதயா பார்ச்வதச்சாபி வாலவ்யஜந ஹஸ்தயா | உபேதம் ஸீதயா பூய: சித்ரயா சசிநம் யதா || தம் தபந்தமிவாதித்யம் உபபந்நம் ஸ்வதேஜஸா | வவந்தே வரதம் வந்தீ விநயஜ்ஞோ விநீதவத் ||” என்று பாரத ராமாயணங்களில் சொல்லப்பட்ட அவதார ஆஸிகையாலே வ்யஞ்சிதமான பரமபத பர்யங்கத்திலே எழுந்தருளியிருக்கிற ஸபத்நீகனான ஸர்வேச்வரன் தாளிணைக்கீழ் “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டு நாம்” என்கிற மநோரதத்தின்படியே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வவித கைங்கர்யங்களையும் பெற்று வாழ்வார்கள். இப்படி ஸ்ரீய:பதியான நாராயணன் திருவடிகளே உபாய தசையிலும் பல தசையிலும் உப ஜீவ்யங்கள்.
– மேலும் இவர்கள், மஹாபாரதம் சாந்திபர்வம் - ததோ மஹதி பர்யங்கே மணிகாஞ்சந சித்ரிதே | ததர்சி க்ருஷ்ணமாஸீநம் நீலம் மேராவிவாம்புதம் || ஜாஜ்வல்யமாநம் வபுஷா திவ்யாபரண பூஷிதம் | ப்ரீதகௌசேய ஸம்விதம் ஹேம்நீவோபசிதம் மணிம் || கௌஸ்துபேந ஹ்யுர:ஸ்தேந மணிநா அபிவிராஜிதம் | உத்யதேவோதயம் சைலம் ஸூர்யேநாப்தம் கிரீடிநம் || நௌபம்யம் வித்யதே தஸ்ய த்ரிஷு லோகேஷு கிஞ்சந – அதன் பின்னர், மாணிக்கம் மற்றும் பொன் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட பெரிய கட்டிலில், மேரு மலையில் மழைமேகம் பொருந்தியுள்ளது போன்று, க்ருஷ்ணனைக் கண்டார். அவனுடைய திருமேனியானது பீதாம்பரத்துடன் கூடியதாகவும், நேர்த்தியான ஆபரணங்கள் பூண்டதாகவும், ஸ்வர்ணத்தில் பதிக்கப்பட்ட நீல இரத்தினம் போன்று உள்ளது. அவனுடைய திருமார்பில் கௌஸ்துபம் ஒளிர, திருமுடியில் க்ரீடமானது ப்ரகாசிக்க, இப்படியாக அவனுடைய அந்த இருப்பானது மலையில் உதிக்கும் சூரியன் போன்று உள்ளது. இவ்விதம் உள்ள அவனுடைய அழகுக்கு ஈடாக மூன்று லோகத்திலும் யாரும் இல்லை – என்றும், இராமாயணம் அயோத்யாகாண்டம் (16 – 8 முதல் 11) - தம் வைச்ரவண ஸங்காசம் உபவிஷ்டம் ஸ்வலங்க்ருதம் | ததர்ச ஸூத: பர்யங்கே ஸௌவர்ணே ஸோத்தரச்சதே || வராஹருதிராபேண சுசிநா ச ஸுகந்திநா | அநுலிப்தம் பரார்த்யேந சந்தநேந பரந்தபம் || ஸ்திதயா பார்ச்வதச்சாபி வாலவ்யஜந ஹஸ்தயா | உபேதம் ஸீதயா பூய: சித்ரயா சசிநம் யதா || தம் தபந்தமிவாதித்யம் உபபந்நம் ஸ்வதேஜஸா | வவந்தே வரதம் வந்தீ விநயஜ்ஞோ விநீதவத் – நேர்த்தியான விரிப்புடன் கூடிய ஸ்வர்ண கட்டிலில் அனைத்து ஆபரணங்களுடன் கூடியவனாக, பன்றியின் குருதி போன்று சிவந்த நறுமணம் கொண்ட சந்தனம் பூசியவனாக, அருகில் உள்ள ஸீதை சந்த்ரனுடன் இணைந்த சித்திரை நக்ஷத்ரம் போன்று சாமரத்துடன் நிற்க, குபேரன் போன்று அமர்ந்திருந்த இராமனை, ஸுமந்திரன் கண்டான். சூரியன் போன்ற தேஜஸ் கொண்டவனாகவும், கேட்கும் வரங்கள் அளிப்பவனாகவும் உள்ள இராமனை ஸுமந்த்ரன் பணிந்தான் – என்றும் உள்ள மஹாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகிய வரிகளில் உள்ள அவதாரங்கள் குறித்த குறிப்புகளில் வெளிப்படுபவனும், பரமபதத்தில் தனது பத்னியுடன் எழுந்தருளியுள்ளவனும் ஆகிய ஸர்வேச்வரனுடைய திருவடிகளில், திருவாய்மொழி - ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டு நாம் – என்ற ஆசைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலும், அனைத்து காலங்களிலும், அனைத்து நிலைகளிலும், அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்தபடி வாழ்வார்கள். இப்படியாக மஹாலக்ஷ்மியின் நாயகனாக உள்ள நாராயணன் திருவடிகளே உபாய நிலை மற்றும் பலன் அடையும் மோக்ஷ நிலை ஆகிய இரண்டு நிலைகளிலும் அடையத்தக்கவை ஆகும்.