Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 8)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்
பூர்வாசார்யர்களைப் பின்பற்றினால் கிட்டும் நன்மைகள்
மூலம் – “ஆத்மா கேவலதாம் ப்ராப்தோ யத்ர கத்வா ந சோசதி”, “அத்யர்காநலதீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர் மஹாத்மந: | ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ்ப்ரேக்ஷம் தேவதாநவை:”, “தத்ர கத்வா புநர்நேமம் லோகமாயந்தி பாரத”, “ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந:” இத்யாதிகளிலும், ஸம்ஸார அத்வாவுக்குப் பாரமென்று ச்ருதிகளிலும் ஓதப்படுகிற பரமபதத்தைப் பர்யந்தமாகவுடைத்தாய், பகவத் ப்ரஸாத அவலம்பநமாய், பரிபூர்ணமான பரமபுருஷார்த்தத்தைப் பெறப் புகுபோகிறோமென்கிற ஸந்தோஷத்தைப் பாதேயமாகவுடைத்தாய்,
– மஹாபாரதம் சாந்திபர்வம் (196-11) - ஆத்மா கேவலதாம் ப்ராப்தோ யத்ர கத்வா ந சோசதி – ஜீவாத்மா தனது துன்பம் நீங்கப்பெறும் இடம் இதுவே ஆகும் – என்றும், மஹாபாரதம் வநபர்வம் (136-18) - அத்யர்காநலதீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர் மஹாத்மந: | ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ்ப்ரேக்ஷம் தேவதாநவை: - விஷ்ணுவுடைய இடமானது சூரியன், அக்னி ஆகியவற்றைக் காட்டிலும் ப்ரகாசத்துடன் உள்ளதாகும்; அதன் ஒளி காரணமாக அதனை தேவர்களாலும் அஸுரர்களாலும் காண இயலாது – என்றும், மஹாபாரதம் வநபர்வம் (136-23) - தத்ர கத்வா புநர்நேமம் லோகமாயந்தி பாரத – பரதகுலத்தில் வந்தவனே! எங்கு சென்றவர்கள் மீண்டும் திரும்புவதில்லையோ – என்றும், மஹாபாரதம் சாந்திபர்வம் (196-6) - ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந: - பரமாத்மாவுடைய இடத்தைக் காணும்போது, மற்ற இடங்கள் அனைத்தும் தாழ்ந்தவையே – என்றும் உள்ள பல வரிகளிலும், ஸம்ஸாரம் என்னும் மார்க்கத்திற்கு அக்கரையாக உள்ளதென்று ச்ருதிகளிலும் ஓதப்படும் பரமபதத்தை எல்லையாகக் கொண்டதாகவும்; பகவத் க்ருபையைத் தனது கைப்பிடியாகக் கொண்டதாகவும்; “பரிபூர்ணமான உயர்ந்த புருஷார்த்தமான பகவத் அனுபவத்தை அடையப்போகிறோம்” என்னும் மகிழ்ச்சியை வழிச்சோறாகக் கொண்டதாகவும்;