Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 4)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்

ரஹஸ்ய த்ரய ஸாரத்தின் ஆழ்பொருளை எவ்வாறு அறியவேண்டும்

மூலம் – இவ்வர்த்தங்களையெல்லாம் முற்பட ஸத்ஸம்ப்ரதாயமுடைய ஸதாசார்யன் பக்கலிலே ஸம்யக் உபஸந்நனாய், “சிஷ்யஸ்தே அஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம்” என்று விண்ணப்பம் செய்து, ஸாதரனாய் விசதமாக ச்ரவணம் பண்ணி இவற்றுக்கு உபயுக்தங்களான நல் வார்த்தைகளையும், “ஸுவ்யாஹ்ருதாநி மஹதாம் ஸுக்ருதாநி ததஸ்தத: | ஸஞ்சிந்வந் தீர ஆஸீத ஸிலஹாரீ ஸிலம் யதா” என்கிறபடியே ஆய்ந்தெடுத்து, அப்யாஸ பூயஸ்தையாலே தெளிந்து கொள்வது.

– இதுவரை கூறப்பட்ட ஆழ்பொருள்கள் அனைத்தையும் முதலில் சீரிய வழியில் உயர்ந்த ஸம்ப்ரதாயத்தைக் கொண்ட ஓர் ஆசார்யனிடம் அவருக்கு ஏற்ற கைங்கர்யங்களைச் செய்து, “கீதை (2-7) - சிஷ்யஸ்தே அஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம் – உன்னைச் சரணம் புகுந்த சிஷ்யனாகிய என்னை ஏற்றுக் கொண்டு உபதேசிக்க வேண்டும்” என்று விண்ணப்பம் செய்யவேண்டும். பின்னர் அவர் உரைப்பதை மிகுந்த ஈடுபாட்டுடன் விரிவாகக் கேட்டு உணரவேண்டும். பின்னர் இவற்றுக்கு உபயோகமாக உள்ளதாக ஆசார்யன் உரைக்கும் அருள்மொழிகளை, மஹாபாரதம் உத்யோகபர்வம் (34-34) - ஸுவ்யாஹ்ருதாநி மஹதாம் ஸுக்ருதாநி ததஸ்தத: | ஸஞ்சிந்வந் தீர ஆஸீத ஸிலஹாரீ ஸிலம் யதா – கீழே சிதறும் தானியங்களைக் கொண்டு உயிர் வாழ்பவன் அவற்றைப் பொறுக்கு எடுத்துச் சேமிப்பது போன்று, சான்றோர்களுடைய சிறந்த சொற்கள் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைத் திரட்டி எடுத்து கவலை இல்லாமல் வாழ்வேண்டும் – என்பதற்கு ஏற்ப, ஆய்ந்து எடுத்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் கேஅல் மற்றும் பார்த்தல் என்னும் வழியில் தெளியவேண்டும்.