Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 1)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்

மூலம் – கர பதரித விச்வ: கச்சித் ஆசார்ய த்ருஷ்டயா முஷித நிகில மோஹோ மூலமந்த்ராதி போக: ஸகுண விஷய ஸித்தௌ ஸம்ப்ரதாயம் ப்ரயச்சந் ஸுசரித ஸிலஹாரீ ஸூரிப்ருந்த அபிநந்த்ய:

– ஒரு அதிகாரி, தனது ஆசார்யனுடைய கடாக்ஷம் காரணமாக, அனைத்து விஷயங்களையும் உள்ளங்கை இலந்தைப்பழம் போன்று நன்றாக அறிகிறான். இதனால் தனது அனைத்துவிதமான அஜ்ஞானங்களும் நீங்கப் பெறுகிறான். மூலமந்த்ரம் முதலானவற்றுடைய ஆழ்பொருளை எப்போதும் எண்ணியபடி இருத்தல் என்னும் அனுபத்தை அடைகிறான். சிறந்த குணங்கள் கொண்ட வேறு ஒருவனைச் சந்தித்தால், தன்னுடைய ஸம்ப்ரதாயத்தைக் குறித்து உபதேசிக்கிறான். சான்றோர்களுடைய பழக்கங்கள் என்பதான தானியங்களைப் பொறுக்கி எடுக்கிறான். இதனால் நித்யஸூரிகளுடைய கூட்டத்தால் கொண்டாடப்படுகிறான்.