Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 18)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்

அத்யாஸீந துரங்க வக்த்ர விலஸத் ஜிஹ்வா அக்ர ஸிம்ஹாஸநாத் ஆசார்யாத் இஹ தேவதாம் ஸமாதிகாம் அந்யாம் ந மந்யாமஹே யஸ்ய அஸௌ பஜதே கதாசித் அஜஹத் பூமா ஸ்வயம் பூமிகாம் மக்நாநாம் பவிநாம் பவார்ணவ ஸமுத்தாராய நாராயண:

– ஸம்ஸாரத்தில் மூழ்கியபடி உள்ள ஸம்ஸாரிகளை, ஸம்ஸாரம் என்னும் ஸமுத்ரத்திலிருந்து கரையேற்றும் விதமாக, ஸ்ரீமந்நாராயணன், தனது மேன்மையைக் கைவிடாதபடியாக, ஆசார்யன் என்னும் வடிவத்தைத் தானே எடுக்கிறான். அப்படிப்பட்ட ஆசார்யனுடைய நாக்கு நுனியானது, ஹயக்ரீவன் ஏறி அமர்ந்துள்ள ஸிம்ஹாஸனமாக விளங்குகிறது. அவரைக் காட்டிலும் இங்கு வேறு எந்த ஒரு தேவதையையும் உயர்ந்ததாக் நாம் எண்ணவில்லை.