Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 17)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்
ஏற்றி மனத்து எழில் ஞான விளக்கை இருள் அனைத்தும் மாற்றினவர்க்கு ஒரு கைம்மா மாயனும் காணகில்லான் போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ் சாற்றி வளர்ப்பதும் கற்றல்லவோ முன்னம் பெற்றதற்கே
– நம்முடைய மனதில் உள்ள அறியாமை என்னும் இருள் அனைத்தும் விலகும்படியாக, ஞானம் என்னும் தீபத்தை ஏற்றி வைக்கும் ஆசார்யனுக்குச் செய்யவேண்டிய கைம்மாறு என்ன என்பதை ஸர்வேச்வரனும் அறியமாட்டான். ஆசார்யனை நாம் போற்றுவதும், நமது மனதில் எப்போதும் எண்ணுவதும், அவருடைய புகழை நாம் கொண்டாடி மேலும் வளர்ப்பதும் ஆகிய செயல்கள் அனைத்தும், அவர் நமக்கு முன்பு செய்த உபகாரத்தைக் காணும்போது, அற்பமே ஆகும்.