Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 16)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்

ஆசார்யவத்தயா மோக்ஷம் ஆமநந்தி ஸ்மரந்தி ச இஹாமுத்ர ச தத்பாதௌ சரணம் தேசிகா விது:

– ஆசார்யனை அடைவதன் மூலம் மோக்ஷம் கிட்டுவதாக உபநிஷத்துக்கள் கூறுகின்றன. இந்த உலகிலும், மோக்ஷம் பெற்ற பின்னரும், ஆசார்யனுடைய திருவடிகளே தஞ்சம் என்பதாக ஆசார்யர்கள் அறிந்தனர்.