Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 13)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்
சிஷ்யனுடைய கடமைகள்
மூலம் – (5) ஸச்சிஷ்யனுக்குப் ப்ராப்த தசையில் உபதேசத்தைத் தவிருமாகில், லுப்தனென்று பேருமாய், “பாத்ரஸ்தம் ஆத்மஞானம் ச க்ருத்வா பிண்டம் ஸமுத் ஸ்ருஜேத் | நாந்தர்தாயநம் ஸ்வயம் யதா யாதி ஜகத்பீஜம் அபீஜக்ருத்” என்கிற பகவந் நியோகத்தையும் கடந்தானாம்.
– (5) தன்னுடைய சிஷ்யன் ஒருவனுக்குத் தகுந்த காலத்தில் உபதேசம் செய்ய ஒருவன் தவறினால், அவன் “பேராசைக்காரன்” என்னும் பெயர் பெறுகிறான். அது மட்டும் அல்லாமல், பௌஷ்கர ஸம்ஹிதை (1-44) - பாத்ரஸ்தம் ஆத்மஞானம் ச க்ருத்வா பிண்டம் ஸமுத் ஸ்ருஜேத் | நாந்தர்தாயநம் ஸ்வயம் யதா யாதி ஜகத்பீஜம் அபீஜக்ருத் – தான் அறிந்த ஆத்மஞானத்தைத் தகுந்த சிஷ்யனுக்கு உபதேசித்த பின்னர் இறக்கவேண்டும். இந்த உலகின் விதை போன்ற ஆத்மஞானத்தைத் தகுந்த பண்ணில் விதைத்த பின்னர் இறக்கவேண்டும். அவ்விதம் செய்யாமல் செல்லக்கூடாது – என்று கூறுகின்ற பகவத் ஆணையையும் மீறியவன் ஆகிறான்.