Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 10)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்
சிஷ்யனுடைய கடமைகள்
மூலம் – தான் இப்படிப் பெற்ற ரஹஸ்யத்ரய ஸாரார்த்தமான மஹாதநத்தை முன்னில் அதிகாரத்திற் சொன்னபடியே உசித ஸ்தாநம் அறிந்து ஸமர்ப்பிக்கும்போது, “கதயாமி யதாபூர்வ தக்ஷாத்யைர்முநிஸத்தமை: | ப்ருஷ்ட: ப்ரவோச பகவாந் அப்ஜயோநி: விதாமஹ: || தைச்சோக்தம் புருகுத்ஸாய பூபுஜே நர்மதாதடே | ஸாரஸ்வதாய தேநாபி மம ஸாரஸ்வதேந ச” என்று ஸ்ரீபராசரப்ரஹ்மர்ஷி மைத்ரேய பகவானுக்கு அருளிச் செய்தாற்போலே, குருபரம்பரையைப் ப்ரகாசிப்பித்துக் கொண்டு, தன் க்ருதஜ்ஞதையும் அர்த்தத்தின் சீர்மையும் தோற்ற, உபதேசிக்கவேண்டும்.
– இவ்விதம் சிஷ்யன் ஒருவன், தான் பெற்ற ரஹஸ்ய த்ரயத்தின் ஆழ்பொருள்கள் என்பதான பெரும் செல்வத்தை, வேறு ஒரு தகுந்தவருக்கு உபதேசம் செய்யும்போது, ஸ்ரீவிபு. (1-2-8, 1-2-9) - கதயாமி யதாபூர்வ தக்ஷாத்யைர்முநிஸத்தமை: | ப்ருஷ்ட: ப்ரவோச பகவாந் அப்ஜயோநி: விதாமஹ: || தைச்சோக்தம் புருகுத்ஸாய பூபுஜே நர்மதாதடே | ஸாரஸ்வதாய தேநாபி மம ஸாரஸ்வதேந ச – முன்பு தாமரையில் உதித்த நான்முகன், தக்ஷர் போன்ற முனிவர்களால் கேட்கப்பட்டு, அவர்களுக்கு உரைத்தான். பின்னர் அவர்களால், நர்மதை நதியின் கரையில் புருகுத்ஸன் என்ற அரசனுக்கு உபதேசிக்கப்பட்டது. அந்த அரசன் அதனை ஸாரஸ்வதனுக்கு உரைத்தான். அதனை நான் உனக்குக் கூறுகிறேன் – என்று ஸ்ரீபராசர மஹரிஷியானவர், பகவான் மைத்ரேயருக்கு அருளிச்செய்தது போன்று, தனது குருபரம்பரையை வெளியிட்டு, அந்தப் பரம்பரை விஷயத்தில் செய்ந்நன்றி மற்றும் உபதேசங்களில் ஆழ்பொருள்கள் ஆகியவை வெளிப்படும்படியாக உபதேசம் செய்யவேண்டும்.