Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 8)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்
சிஷ்யனுடைய கடமைகள்
மூலம் – (5) அடியிலே வித்யைதான் “சேவதிஷ்டே அஸ்மி ரக்ஷ மாம்” என்று ப்ராஹ்மணனை அபேக்ஷித்தபடியே முன்பே அஸூயாதிகளைக் கைப்பிடித்து வைப்பார் கையிற் காட்டிக்கொடாதே ரக்ஷித்துக் கொள்ளவும்.
– (5) ப்ரஹ்மவித்யையானது ப்ராஹ்மணனிடம் வந்து, “மநுஸ்ம்ருதியில் (2-114) - சேவதிஷ்டே அஸ்மி ரக்ஷ மாம் – நான் உனக்குச் சேம நிதியாகவே எப்போதும் இருப்பேன். என்னை நீ காப்பாயாக”, என்று கூறுவதற்கு ஏற்ப, வித்யையைப் பொறாமை உள்ளவர்களுக்கு உபதேசிக்காமல் காப்பாற்றவேண்டும்.