Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 7)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்
சிஷ்யனுடைய கடமைகள்
மூலம் – (2) “யச்ச்ருதம் ந விராகாய ந தர்மாய ந சாந்தயே | ஸுபத்தமபி சப்தேந காகவசிதமேவ தத்” என்கிறபடியே, கற்றதே ப்ரயோஜநமாக்காதொழியவும். (3) இவற்றைக் கொண்டு வாந்தாசியாகாதொழியவும். (4) இவற்றையெல்லாம், “பண்டிதைரர்த்த கார்பண்யாத் பண்ய ஸ்த்ரீபிரிவ ஸ்வயம் | ஆத்மா ஸம்ஸ்க்ருத்ய ஸம்ஸ்க்ருத்ய பரோபகரணீக்ருத:” இத்யாதிகளில் பரிஹஸிக்கிறபடியே, கணிகாலங்காரமாக்குதல், விலைச்சாந்தாக்குதல், அம்பலத்தில் அவற்பொதியாக்குதல், குரங்கின் கையில் பூமாலையாக்குதல் செய்யாதொழியவும்.
(2) இதிஹாஸ ஸமுச்சயம் (12-38) - யச்ச்ருதம் ந விராகாய ந தர்மாய ந சாந்தயே | ஸுபத்தமபி சப்தேந காகவசிதமேவ தத் – எத்தகைய கல்வியானது வைராக்யம், தர்மம், அடக்கம் ஆகியவற்றை அளிக்கவில்லையோ, அத்தகைய கல்வியானது காக்கையின் ஒலி போன்று பயனற்றதே ஆகும் – என்று கூறுவதற்கு ஏற்ப, தான் பெற்ற உபதேசங்கள் அனைத்தையும், “கற்றது மட்டுமே பயன். கடைப்பிடிக்கப்படவில்லை” என்னும் நிலைக்குத் தள்ளக்கூடாது. (3) அந்த உபதேசங்களை, கக்கியதை உண்பவன் போன்று, வியாபாரம் ஆக்குதல் கூடாது. (4) மேலும், “பண்டிதைரர்த்த கார்பண்யாத் பண்ய ஸ்த்ரீபிரிவ ஸ்வயம் | ஆத்மா ஸம்ஸ்க்ருத்ய ஸம்ஸ்க்ருத்ய பரோபகரணீக்ருத: - விலைமாதர்கள் தங்களுடைய சரீரத்தை நன்கு அலங்கரித்து மற்றவர்களுக்குப் பயன்படும்விதமாகச் செய்கிறார்கள், இதனைப் போன்றே கல்வியில் சிறந்த ஒரு சிலர் தங்களுடைய கல்வியைப் பொருளாசை காரணமாக மற்றவர்களுக்கே பயன்படுத்துகிறார்கள்” என்று பரிகாசம் செய்வதற்கு ஏற்ப, தாங்கள் பெற்ற உபதேசங்களை விலைமாதர்களுடைய அலங்காரம் போன்றும், உயர்ந்த சந்தனத்தை தான் அனுபவிக்காமல் விலைக்கு விற்பது போன்றும், கையில் உள்ள அவல் மூட்டையைப் பிரிக்க அதனை மற்றவர்கள் தின்று தீர்ப்பது போன்றும், குரங்கின் கையில் சிக்கிய பூமாலை போன்றும் செய்யாமல் இருக்கவேண்டும்.