Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 6)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்

சிஷ்யனுடைய கடமைகள்

மூலம் – (1) இவன் உபதேசித்த அர்த்தங்களை, “கபாலஸ்தம் யதா தோயம் ச்வத்ருதௌ ச யதா பய: | த்ருஷ்டம் ஸ்யாத் ஸ்தாநதோஷேண வ்ருத்திஹீநே ததா ச்ருதம்” என்கிறபடியே தன் விபரீத அநுஷ்டாநங்களாலே கபாலஸ்த தோயாதிகளைப் போலே, அநுபஜீவ்யமாக்காதொழியவும்.

– (1) ஆசார்யன் தனக்கு உபதேசித்த ஆழ்பொருள்களை, மஹாபாரதம் சாந்தி பர்வம் (35-42) - கபாலஸ்தம் யதா தோயம் ச்வத்ருதௌ ச யதா பய: | த்ருஷ்டம் ஸ்யாத் ஸ்தாநதோஷேண வ்ருத்திஹீநே ததா ச்ருதம் – மண்டை ஓட்டில் உள்ள தண்ணீரும், நாயின் தோலால் செய்யப்பட்ட பையில் உள்ள பாலும், அவை உள்ள இடங்கள் காரணமாக தோஷத்துடன் கூடியவையாக உள்ளது போன்று, ஒழுக்கம் இல்லாதவனுக்குச் செய்யப்பட்ட உபதேசமும் ஆகிறது – என்று கூறுவதற்கு ஏற்ப, தன்னுடைய தகாத செய்கைகளால், மண்டை ஓட்டில் வைக்கப்பட்டவற்றைப் போன்று, மற்றவர்களுக்குப் பயன்படாதபடி செய்யாமல் இருக்கவேண்டும்.