Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 3)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்
ஆசார்யனுக்குச் செய்யவேண்டிய கைம்மாறு ஏதும் இல்லை
மூலம் - (2) “சரீரமர்த்தம் ப்ராணம் ச ஸத்குருப்யோ நிவேதயத்” என்றும், “ஸர்வஸ்வம் வா ததர்தம் வா ததர்த்தார்த்தார்த்தம் ஏவ வா | குரவே தக்ஷிணாம் தத்யாத் யதாசக்த்யபி வா புந:” என்றும் இப்படைகளிற் சொல்லுகிறவையும், ப்ரணிபாத அபிவாதநாதிகளைப் போலே இவனுக்குச் சில கர்த்தவ்யங்களைச் சொல்லிற்றத்தனை போக்கி, “க்ருபயா நி:ஸ்ப்ருஹோ வதேத்” என்னும்படியிருக்கிற அநந்யப்ரயோஜநனான ஆசார்யனுக்குப் ப்ரத்யுபகாரம் சொன்னபடியன்று.
– விஹகேச்வர ஸம்ஹிதையில் - சரீரமர்த்தம் ப்ராணம் ச ஸத்குருப்யோ நிவேதயத் – ஒரு சிஷ்யன் தனது சரீரம், செல்வம், ப்ராணன் ஆகியவற்றை சிறந்த ஆசார்யனிடம் சமர்ப்பணம் செய்யவேண்டும் – என்றும், ஸர்வஸ்வம் வா ததர்தம் வா ததர்த்தார்த்தார்த்தம் ஏவ வா | குரவே தக்ஷிணாம் தத்யாத் யதாசக்த்யபி வா புந: - சிஷ்யன் தனது செல்வத்தை முழுவதுமோ, அல்லது பாதி பாகத்தையோ, அல்லது கால் பாகத்தையோ, அல்லது தனது சக்திக்கு ஏற்பவோ, தனது ஆசார்யனுக்கு குருதக்ஷிணையாக அளிக்கவேண்டும் – என்றும் கூறப்பட்டுள்ளன. இது போன்ற உபதேசங்கள் அனைத்தும், ஆசார்யனை வணங்குதல் என்பது போன்ற கடமைகளாக மட்டுமே கூறப்பட்டுள்ளன. இவை மூலமாக, சாண்டில்ய ஸ்ம்ருதி (1-115) - க்ருபயா நி:ஸ்ப்ருஹோ வதேத் – ஒரு பயனையும் கருதாமல் உபதேசிக்கவேண்டும் – என்று கூறுவதற்கு ஏற்ப உள்ளவரும், எந்தப் பயனையும் எதிர்பாராமல் உள்ளவரும் ஆகிய ஆசார்யனுக்கு ப்ரதி உபகாரம் செய்தலே கூறப்பட்டது என்று கருத்து அல்ல.