Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 1)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்

மூலம் – அசிதில குருபக்தி: தத் ப்ரசம்ஸாதி சீல: ப்ரசுர பஹுமதி: தத் வஸ்து வாஸ்து ஆதிகே அபி குணவதி விநியோக்தும் கோபயந் ஸம்ப்ரதாயம் க்ருதவித் அநகவ்ருத்தி: கிம் ச விந்தேத் நிதாநம்

– குறைவில்லாத குருபக்தி கொண்டவனும், ஆசார்யனைப் புகழ்தல் முதலானவற்றைச் செய்தபடி உள்ளவனும், அவருடைய பொருள்கள் மற்றும் உடைமைகள் ஆகியவற்றிலும் உயர்ந்த புத்தி கொண்டவனும், சிறந்த குணங்கள் கொண்டர்களுக்காக மட்டுமே உபதேசிக்கப்படும்விதமாக ஸம்ப்ரதாயமாக வரும் உபதேசங்களைக் காப்பாற்றுபவனும், ஆசார்யன் செய்த உதவியை எப்போதும் நினைவில் கொள்பவனும், விதிக்கப்பட்டவற்றைச் செய்தபடி உள்ளவனும் ஆகிய ஒருவன், உயர்ந்த புதையலாகிய ஸர்வேச்வரனை ஏன் அடையமாட்டான்?