Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 14)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம்

நிரவதி தயா திவ்ய உதத்வத் தரங்க நிரங்குசை: நியமயதி ய: சிஷ்யாந் சிக்ஷா க்ரமை: குண ஸங்க்ரமை: அசரம் குரோராஜ்ஞா பாரம்பரீ பரவாநஸௌ ந பரமிஹ தாந் தல்லக்ஷேண ஸ்வயம் அபி ரக்ஷதி

– யார் ஒருவர், எல்லை காண இயலாத உயர்ந்த ஸமுத்ரத்தின் அலைகள் போன்று தடை அற்றவையும், சிறந்த குணங்களை உண்டாக்கவல்லவையும் ஆகிய கல்வி முறைகளால், தனது சிஷ்யர்களை நியமிக்கிறாரோ, அப்படிப்பட்ட குருவானவர் தன்னுடைய சிஷ்யர்களை மட்டும் காப்பாற்றவில்லை; அதே காரணத்தால், அனைவருக்கும் முதல் ஆசார்யனாக உள்ள பகவானுடைய ஆணைக்கு அடங்கி நடந்து, தன்னையும் காப்பாற்றிக் கொள்கிறார்.