Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 13)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம்

மருளற்ற தேசிகர் வானுகப்பாலிந்த வையமெல்லாம் இருளற்று இறைவன் இணையடி பூண்டுயவெண்ணுதலால் தெருளுற்ற செந்தொழிற் செல்வம் பெருகிச் சிறந்தவர்பால் அருளற்ற சிந்தையினால் அழியா விளக்கினரே

– அறியாமை என்பது சிறிதும் அற்ற சான்றோர்கள் பரமபதம் செல்ல விரும்பியதாலும், இந்த உலகம் முழுவதும் அறியாமை நீங்கப்பெற்று பகவானுடைய பொருந்திய இரண்டு திருவடிகளை உபாயமாகப் பற்றி நின்று கரையேற வேண்டும் என்று எண்ணுவதாலும், கருணை நிறைந்த மனத்துடன், சிறந்த விவேகம் நிறைந்த கைங்கர்யம் என்னும் செல்வம் பெருகி, சிறந்த சிஷ்யர்களிடம் அழியாத ஸம்ப்ரதாயம் என்னும் தீபத்தை ஏற்றினர்.