Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 12)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம்

பாட்டுக்குரிய பழையவர் மூவரைப் பண்டொருகால் மாட்டுக்கருள் தரு மாயன் மலிந்து வருத்துதலால் நாட்டுக்கிருள் செக நான்மறையந்தாதி நடை விளங்க வீட்டுக்கிடை கழிக்கே வெளிகாட்டும் அம்மெய் விளக்கே

– அனைவருக்கும் அருள் புரிபவனும், வியக்கவைக்கும் செயல்கள் செய்பவனும் ஆகிய ஸர்வேச்வரன், சிறந்த பாசுரங்கள் கொண்டு தன்னைக் குறித்து பாடத்தக்கவர்களான மூன்று முதலாழ்வார்களையும், முன்பு ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக நின்று வருத்தினான். அப்போது அவர்களால் அங்கு வெளிப்பட்ட ப்ரபந்தங்கள் என்னும் மெய்யான தீபமானது, இந்த உலகத்தைச் சூழந்துள்ள அறியாமை என்னும் இருள் நீங்குவதற்காகவும், வேதாந்த மார்க்கம் நன்கு தழைப்பதற்காகவும், சிறந்த வழிகளை வெளிப்படுத்தும்.