Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 11)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம்
இந்த ப்ரபந்தத்தில் உள்ளவை வழிவழியாக வந்தவை ஆகும்
மூலம் – இப்படி ரஹஸ்ய த்ரயத்தைப் பற்றின கீழும் மேலும் உள்ள பாசுரங்களை யெல்லாம் வேதாந்த உதயந ஸம்ப்ரதாயமான மடைப்பள்ளி வார்த்தையை ஆசார்யன் பக்கலிலே தாம் கேட்டருளினபடியே கிடாம்பியப்புள்ளார் அடியேனைக் கிளியைப் பழக்குமாப் போலே பழக்கி வைக்க அவர் திருவுள்ளத்தில் இரக்கமடியாகப் பெருமாள் தெளியப் ப்ரகாசிப்பித்து மறவாமற் காத்துப் பிழையறப் பேசுவித்த பாசுரங்கள்.
– இவ்விதமாக “ரஹஸ்ய த்ரயம்” குறித்து நாம் இதுவரையிலும், இனியும் உள்ள உரைத்த விஷயங்கள் முழுவதும், வேதாந்த சாஸ்த்ரத்திற்கு உதயநர் போன்று உள்ளவரும், திருமடைப்பள்ளியாச்சான் தனக்கு உபதேசம் செய்தவற்றை ஆசார்யனிடம் தான் கேட்டருளியவிதமாக அடியேனுக்கு உபதேசித்தவரும், நம்மைக் கிளிப்பிள்ளை போன்று பழக்கியவரும் ஆகிய கிடாம்பி அப்புள்ளார் அடியேனுக்கு உபதேசம் செய்தவை ஆகும். அவருடைய திருவுள்ளத்தில் உள்ள இரக்கம் காரணமாக, அவர் உபதேசம் செய்த அனைத்தையும் எம்பெருமான் அடியேனுக்கு மிகவும் தெளிவாக்கி, அவற்றை என்றும் மறக்காமலும், பிழை இன்றி உரைக்கும்விதமாகவும் செய்தான். அந்த விஷயங்கள் இவையே ஆகும்.