Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 10)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம்

ப்ரத்யேயஸ்து விலக்ஷண: ப்ரக்ருதி தஸ்த்ராதா பதிஸ்தத்பர: தஸ்மிந்நாத்ம பரார்ப்பணம் ஹித தமம் தச்சேஷவ்ருத்தி: பலம் இத்தம் தத்வ ஹிதே புமர்த்தம் இதி நஸ்த்ரேதா விபக்தம் தநம் தாயத்வேந தயாதநா: ஸ்வயம் அது: ததாத்மநாம் தேசிகா:

– ப்ரக்ருதியைக் காட்டிலும் உயர்ந்தவனாகிய ஜீவாத்மா அசேதநம் மற்றும் ஈச்வரன் ஆகியவர்களைக் காட்டிலும் வேறுபட்டவன் என்றே எண்ணத் தக்கவன் ஆவான். அவனைக் காட்டிலும் உயர்ந்தவனாகிய ஈச்வரன், ரக்ஷகன் மற்றும் எஜமானன் என்றும், சேதநம் மற்றும் அசேதநங்களைக் காட்டிலும் வேறுபட்டவன் என்றே எண்ணத் தக்கவன் ஆவான். அப்படிப்பட்ட ஈச்வரனிடம் தனது பொறுப்புகள் அனைத்தையும் சமர்ப்பணம் செய்தல் என்பது மிகுந்த நன்மையானது ஆகும். ஈச்வரன் மற்றும் அவனது அடியார்களுக்கு கைங்கர்யங்களைச் செய்தல் என்பது மிகுந்த பயன் அளிக்கும். இப்படியாக தத்வம், நன்மை மற்றும் பயன் என மூன்றுவிதமாகச் செல்வங்கள் உள்ளன. ஆத்மாவை சமர்ப்பணம் செய்த ஆசார்யர்கள், கருணை என்பதையே தங்கள் செல்வமாகக் கொண்டு, மேலே கூறப்பட்ட செல்வத்தில் நமக்குரிய பங்கை, தாங்களாகவே அளித்தனர்.