Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 9)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம்

ஆசார்யர்களுடைய உபதேசங்கள்

மூலம் – “ஸதாசார்யன் காட்டிக் கொடுக்கக் கைக்கொண்ட எம்பெருமான் இனி நம்மை ஒரு படிக்கும் கைவிடான் என்கிற தேற்றத்தோடே இங்கு இருந்த காலம் அபவர்க பூர்வ ரஸங்கமான நிரபராத அநுகூல வ்ருத்தியோடே நடப்பது” என்று உத்தரக்ருத்யத்தையும் ஸங்க்ரஹ ருசிகளுக்குச் சுருங்க அருளிச்செய்வார்கள்.

“நம்முடைய சிறந்த ஆசார்யன் நம்மை எம்பெருமானிடம் காட்டிக் கொடுத்துள்ளான்; இவ்விதம் நம்மைக் கைக்கொண்ட எம்பெருமான் இனி ஒருபோதும், எந்த நிலையிலும் நம்மைக் கைவிடமாட்டான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் வாழவேண்டும். இந்த உலகில் வாழும் காலம் முடிய, இந்த வாழ்க்கையானது மோக்ஷம் பெற்ற பின்னர் அடையும் வாழ்விற்கான ஒரு ஒத்திகையே ஆகும் என்று எண்ணியபடி, எந்தவிதமான அபசாரங்களும் இல்லாதபடி, பகவானுக்கு ஏற்றவிதத்தில் இருக்கவேண்டும்”, என்று ஆத்மசமர்ப்பணம் செய்த பின்னர் செய்யவேண்டியவற்றையும், சுருக்கமாக அறியவிரும்புபவர்களுக்காக சுருக்கமாக அருளிச்செய்வார்கள்.