Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 8)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம்
ஆசார்யர்களுடைய உபதேசங்கள்
மூலம் – “அநாதிகாலம் அந்தாதியாக ஸம்ஸாரித்துப் போந்த அடியேனுக்கு இனி ஒரு கர்ப்பவாஸாதி க்லேசம் வாராதபடி திருவடிகளைத் தந்து ரக்ஷித்தருள வேண்டுமென்று ஆசார்யன் ப்ரஸாதித்த குரு பரம்பரா பூர்வக த்வயத்தாலே ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை சரணமாகப் பற்றி ஆத்மாத்மீயங்களையும், அவற்றைப் பற்ற வரும் சுமைகளையும் அங்கே ஸமர்ப்பிப்பது” என்று ஹிதத்தையும்.
– அடுத்ததாக, “எல்லையற்ற காலமாக நான் ஸம்ஸாரத்தில் உழன்றபடி உள்ளேன். இனியும் எனக்கு கர்ப்பவாஸம் (அதாவது மீண்டும் ஒரு பிறவி) முதலான துன்பங்கள் உண்டாகாதவிதமாக உன்னுடைய திருவடிகளை எனக்கு அளித்து என்னை காக்கவேண்டும் என்று உரைத்து, குரு பரம்பரையை முன்னிட்டுக் கொண்டு ஆசார்யன் உபதேசித்த த்வயம் மூலமாக ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகளே சரணம் என்று பற்றவேண்டும். அதனைத் தொடர்ந்து தன்னையும், தனது உடைமைகளையும், பாரங்களையும் அவனிடம் சமர்ப்பணம் செய்யவேண்டும்” என்று நன்மைகளையும்.