Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 7)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம்
ஆசார்யர்களுடைய உபதேசங்கள்
மூலம் – இவர்கள் “தேஹ இந்த்ரியாதி வ்யதிரிக்தனாய் நித்யனாயிருப்பான் ஓர் ஆத்மா உண்டு. இச் சேதநாசேதநங்கள் இரண்டுமொழிய இவற்றுக்கு அந்தர்யாமியாய் சேஷியாயிருப்பான் ஒரு பரமாத்மா உண்டு. இப்பரமாத்மாவையொழிய இவ்வாத்மாவுக்கு தானும் பிறரும் ரக்ஷகராக மாட்டார்” என்று தத்வத்தையும்.
– ஆசார்யர்கள், “(அநித்யமான) சரீரம், இந்த்ரியங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் வேறுபட்டவனும், நித்யமாக உள்ளவனும் ஆகிய ஆத்மா என்னும் ஒருவன் உள்ளான். சேதநங்கள் மற்றும் அசேதநங்களை ஆகியவற்றைக் காட்டிலும் வேறுபட்டவனும், இவற்றுக்கு அந்தர்யாமியாக உள்ளவனும், இவற்றுக்கு எஜமானனும் ஆகிய பரமாத்மா என்னும் ஒருவன் உள்ளான். இந்த ஆத்மாவிற்கு, பரமாத்மா அல்லாமல் வேறு யாரும் காப்பாற்றுபவர்கள் அல்லர்”, என்னும் உண்மைகளையும்.