Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 6)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம்

உபதேசங்களை யாருக்கு உபதேசம் செய்யவேண்டும், செய்யக்கூடாது

மூலம் – “அபயம் ஸத்த்வ ஸம்சுத்தி: ஜ்ஞாநயோக வ்யவஸ்திதி: | தாநம் தமச்ச யஜ்ஞச்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம்”, “அஹிம்ஸா ஸத்யம் அக்ரோத: த்யாக: சாந்திரபைசுநம் | தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம்”, “தேஜ: க்ஷமா த்ருதி: சௌசம் அத்ரோஹோ நாதிமாநிதா | பவந்தி ஸம்பதம் தைவீம் அபிஜாதஸ்ய பாரத” என்றும், “த்விவிதோ பூதஸர்க: அயம் தைவ ஆஸுர ஏவ ச | விஷ்ணுபக்திபரோ தைவ:” என்றும் சொல்லப்பட்ட தைவப்ரக்ருதிகளுக்கு “ஸம்வத்ஸரம் ததர்தம் வா மாஸத்ரயமதாபி வா | பரீக்ஷ்ய விவிதோபாயை: க்ருபயா நிஸ்ப்ருஹோ வதேத்”, “யத்ருச்சயோபஸந்நாநாம் தேசாந்தர நிவாஸிநாம் | இஷ்டோபதேச: கர்தவ்யோ நாராயண ரதாத்மநாம்” இத்யாதிகளிற் சொன்ன பரீக்ஷாதி மூல குண நிச்சய பூர்வகமாக, “ச்ருதாதந்யத்ர ஸந்துஷ்ட: தத்ரைவ ச குதூஹலீ” என்னலாம் அவஸ்தையிலே அஷட்கர்ணமாக வெளியிட்டு, “டம்போ தர்ப: அதிமாநச்ச க்ரோத: பாருஷ்யமேவ ச | அஜ்ஞாநம் ச அபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம்” என்றும், “விபரீத: ததா அஸுர:” என்றும் சொல்லப்பட்ட ஆஸுர ப்ரக்ருதிகளுக்கு மறைத்துச் சீரிய தநமுடையார் சேமித்து வாழுமாப்போலே சரிதார்த்தராய் வர்த்திப்பார்கள் பூர்வாசார்யர்கள்.

– கீதை (16-1) - அபயம் ஸத்த்வ ஸம்சுத்தி: ஜ்ஞாநயோக வ்யவஸ்திதி: | தாநம் தமச்ச யஜ்ஞச்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் – எதற்கும் அச்சம் கொள்ளாமல் இருத்தல், ஸத்வ குணத்துடன் இருத்தல், ஆத்ம ஸ்வரூபம் குறித்த சிந்தனையுடன் இருத்தல், தானம் அளித்தல், மனதைத் தன்வசப்படுத்தல், யஜ்ஞம் செய்தல், உபவாஸம் முதலான தவம் செய்தல், வேத அப்யாஸத்தில் ஈடுபடுதல், சொல் வாக்கு செயல் ஆகியவை ஒன்றாக இருத்தல் – என்றும், கீதை (16-2) - அஹிம்ஸா ஸத்யம் அக்ரோத: த்யாக: சாந்திரபைசுநம் | தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம் – மற்ற உயிர்களுக்கு துன்பம் உண்டாக்காமை, உண்மையை மட்டுமே உரைத்தல், கோபம் அடையாமல் இருத்தல், நன்மை உண்டாக்காதவற்றைத் துறத்தல், இந்த்ரியங்களை அடக்குதல், புறங்கூறாமை, அன்புடன் இருத்தல், புலன் விஷயங்களில் பற்று நீங்குதல், மென்மையுடன் இருத்தல், தீமையைச் செய்ய வெட்கம் அடைதல், சபலம் கொள்ளாமை – என்றும், கீதை (16-3) - தேஜ: க்ஷமா த்ருதி: சௌசம் அத்ரோஹோ நாதிமாநிதா | பவந்தி ஸம்பதம் தைவீம் அபிஜாதஸ்ய பாரத – தீய எண்ணம் கொள்பவர்களால் வெல்ல இயலாமல் இருத்தல், பொறுமையாக இருத்தல், உறுதியுடன் இருத்தல், தூய்மையாக இருத்தல், நற்செயல்களைத் தடுக்காமை, கர்வம் அடையாமல் இருத்தல் ஆகியவை தெய்வீகமான குணம் கொண்டவனுக்கு உள்ள தன்மைகள் ஆகும் – என்றும், ஸ்ரீவிஷ்ணுதர்மம் (109-74) - த்விவிதோ பூதஸர்க: அயம் தைவ ஆஸுர ஏவ ச | விஷ்ணுபக்திபரோ தைவ: - ஸ்ருஷ்டி என்பது தெய்வம் மற்றும் ஆஸுரம் என்னும் இரண்டுவிதமாக உள்ளது. விஷ்ணுவிடம் பக்தியுடன் உள்ளது தெய்வப் பிறவியாகும் – என்றும் உள்ள பல வாக்கியங்கள் மூலமாக தெய்வப் பிறவிகளுடைய தன்மைகள் கூறப்பட்டன. இப்படிப்பட்ட தெய்வப் பிறவிகளை, சாண்டில்ய ஸ்ம்ருதி (1-115) - ஸம்வத்ஸரம் ததர்தம் வா மாஸத்ரயமதாபி வா | பரீக்ஷ்ய விவிதோபாயை: க்ருபயா நிஸ்ப்ருஹோ வதேத் - ஆசார்யன் தனது சிஷ்யனை ஒரு வருடம் அல்லது ஆறு மாதம் அல்லது மூன்று மாதம் ஆகியவற்றில் பலவிதமான சோதனைகள் செய்து, அதன் பின்னர் எந்தப் பயனையும் எதிர்பாராமல், தனது க்ருபையை மட்டுமே முன்னிறுத்தி உபதேசிக்கவேண்டும் – என்றும், ஸாத்விக ஸம்ஹிதை (21-45) - யத்ருச்சயோபஸந்நாநாம் தேசாந்தர நிவாஸிநாம் | இஷ்டோபதேச: கர்தவ்யோ நாராயண ரதாத்மநாம் – நாராயணனிடம் எப்போதும் ஈடுபட்டபடி உள்ளவர்கள், மிகுந்த தூரதேசத்திலிருந்து வந்தால், அவர்களுக்கு எந்தவிதமான சோதனையும் இன்று உபதேசம் செய்யவேண்டும் – என்றும் உள்ள வாக்கியங்களின்படி சோதனைகள் மூலமாக அவர்களுடைய குணங்களை உறுதி செய்யவேண்டும். அதன் பின்னர் - ச்ருதாதந்யத்ர ஸந்துஷ்ட: தத்ரைவ ச குதூஹலீ – சாஸ்த்ரங்களைக் கேட்பதில் ஆர்வம் கொண்டும், மற்ற விஷயங்களை அறிவதில் ஆர்வம் அற்றும் – என்று கூறும் நிலையை அடைந்தவுடன், ஆசார்யன் உபதேசிக்கக் கேட்கலாம்படி ரஹஸ்ய அர்த்தங்களை ஆசார்யன் வெளியிடுகிறார். ஆனால் கீதை (16-4) - டம்போ தர்ப: அதிமாநச்ச க்ரோத: பாருஷ்யமேவ ச | அஜ்ஞாநம் ச அபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம் – புகழ் அடையவேண்டும் என்னும் எண்ணத்துடன் தர்மம் செய்தல், செருக்குடன் கூடிய நிலை, கோபம், கடுமை, அறிவற்ற தன்மை – ஆகியவை அஸுரர்களுக்கே உரிய தன்மை ஆகும் - என்றும், விபரீத: ததா அஸுர: - விபரீதமான அறிவு கொண்ட அஸுரப்பிறவிகள் – என்றும் கூறுவதற்கு ஏர்ப உள்ள அஸுரப்பிறவிகளுக்கு இந்த ரஹஸ்யங்களை ஆசார்யன் மறைப்பார். இப்படியாகச் செல்வம் கொண்டவர்கள் சேமித்து வாழ்வது போன்று ஆசார்யர்கள் வாழ்வர்கள்.