Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 5)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம்
உபதேசங்களை யாருக்கு உபதேசம் செய்யவேண்டும், செய்யக்கூடாது
மூலம் – “தொண்டர்க்கமுதுண்ணச் சொல்மாலைகள் சொன்னேன்”, “அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளைச் சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து” என்று ஸ்ரீஸாத்வத பகவத்கீதா வஸிஷ்ட கராலஸம்வாத சாண்டில்யஸ்ம்ருதி இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே சரண்யன் அநுமதி பண்ணும்படிக்கு ஈடான ஸாத்விகதா ஆஸ்திக்யாதி குணங்களையுடைராய்,
– திருவாய்மொழி (9-4-9) - தொண்டர்க்கமுதுண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் – என்றும், நான்முகன் திருவந்தாதி (1) - அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளைச் சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து – என்று கூறுவதற்கு ஏற்ப ஸ்ரீஸாத்வத ஸம்ஹிதை, ஸ்ரீமத் பகவத்கீதை, மஹாபாரதத்தில் உள்ள “வஸிஷ்ட கரால உரையாடல்கள்”, சாண்டில்ய ஸ்ம்ருதி ஆகியவற்றில் உரைத்தபடியே, சரணம் புகத் தக்கவனாக உள்ள ஸர்வேச்வரன் ஏற்பதற்கு ஈடாக உள்ளதான ஆஸ்திகம் முதலான சிறந்த குணங்களைக் கொண்டவர்களாக.