Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 4)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம்
உபதேசங்களை யாருக்கு உபதேசம் செய்யவேண்டும், செய்யக்கூடாது
மூலம் – “வித்யயைவ ஸமம் காமம் மர்தவ்யம் ப்ரஹ்மவாதிநா | ஆபத்யபி ச கோராயாம் நத்வேநாமிரிணே வபேத்”, “ஏகதஸ்த்வபவர்கார்த்தம் அநுஷ்டாநாதிகௌசலம் | லோகாந் அநுஸாரஸ்த்வேகத்ர குரு: பச்சாத் உதீரித:”, “பவந்தி பஹவோ மூர்கா: க்வசித் ஏகோ விசுத்ததீ: | த்ராஸித: அபி ஸதா மூர்கை: அசலோ ய: ஸ புத்திமாந்”, “ந விச்வாஸ: க்வசித் கார்யோ விசேஷாத்து கலௌ யுகே | பாபிஷ்டா வாதவர்ஷேண மோஹயந்த்ய விசக்ஷணாந்”, “கோபயந்நாசரேத் தர்மம் நாப்ருஷ்ட: கிஞ்சித் உச்சரேத் | ப்ருஷ்ட: அபி ந வதேத் அர்தம் குஹ்யம் ஸித்தாந்தம் ஏவ ச”, “ஆச்ரிதாயாதி பக்தாய சாஸ்த்ர ச்ரத்தாபராய ச | ந்யாயேந ப்ருச்சதே ஸர்வம் வக்தவ்யம் சௌசயோகிநே”, “ஆத்ம பூஜார்த்தம் அர்தார்தம் டம்பார்தம் அபி கிந்நதீ: | அயோக்யேஷு வதந் சாஸ்த்ரம் ஸந்மார்காத் ப்ரச்யுதோ பவேத்”, “ஊஷரே நிவபேத்விஜம் ஷண்டே கந்யாம் ப்ரயோஜயேத் | ஸ்ருஜேத்வா வாநரே மாலாம் நாபத்ரே சாஸ்த்ரம் உத்ஸ்ருஜேத்” என்றும், “ந நாஸ்திகாயாந்ருஜவே நாபக்தாய கதாசந | நைவ ஹிம்ஸாபிருசயே ந லுப்தாய விசேஷத:”, “தாதவ்யோ மந்த்ரராஜ: அயம் மந்த்ர: அயம் ந ஹி தாத்ருச: | ருஜவே குருபக்தாய வைஷ்ணவாய விசேஷத:”, “ஸர்வப்ராண்யநுகூலாய தாதவ்யோ தேசிகேந து” என்றும்,
மநு ஸ்ம்ருதி (2-113) – வித்யயைவ ஸமம் காமம் மர்தவ்யம் ப்ரஹ்மவாதிநா | ஆபத்யபி ச கோராயாம் நத்வேநாமிரிணே வபேத் – ப்ரஹ்மத்தைக் குறித்த உபதேசம் பெறத்தக்க சிஷ்யன் கிட்டவில்லையென்றால், தான் அறிந்த வித்யையுடன் இறக்கவேண்டும். கோரமான ஆபத்து உண்டானாலும், ப்ரஹ்மவித்யையை தகாத நிலத்தில் விதைக்கக்கூடாது – என்றும், சாண்டில்ய ஸ்ம்ருதி (4-251 முதல் 259) – மூர்காச்ச பண்டிதம் மந்யா அதர்மா தார்மிகா இவ | தர்மயுக்தாந் ப்ரபாதந்தே ஸாதூநாம் லிங்கமாஸ்திதா: - மூடர்கள் தங்களைப் பண்டிதர்களாக எண்ணிக்கொண்டு தாங்கள் அதர்மத்தைப் பின்பற்றினாலும் தர்மவான்கள் போன்று தங்களை வெளிப்படுத்திக் கொண்டு, ஸாதுக்கள் போன்ற வேஷம் பூண்டு அனைவரையும் துன்புறுத்துகிறார்கள் – என்றும், ஏகதஸ்த்வபவர்கார்த்தம் அநுஷ்டாநாதிகௌசலம் | லோகாந் அநுஸாரஸ்த்வேகத்ர குரு: பச்சாத் உதீரித: - ஒரு பக்கம் மோக்ஷம் செல்வதற்கான செயல்களைச் சரியானபடி செய்து வருவதாகக் காண்பித்துக் கொண்டு, மறு பக்கம் உலகியல் வாழ்க்கையை நடத்தியபடி உள்ள ஆசார்யன் இழியப்படுகிறான் – என்றும், பவந்தி பஹவோ மூர்கா: க்வசித் ஏகோ விசுத்ததீ: | த்ராஸித: அபி ஸதா மூர்கை: அசலோ ய: ஸ புத்திமாந் – தீய அறிவு நிறைந்தவர்கள் பலர் உள்ளனர். கலங்காத தூய்மையான அறிவு கொண்டவன் சிலரில் ஒருவனே உள்ளான். தீய அறிவு நிறைந்தவர்களால் அச்சுறுத்தப்பட்டாலும் கலங்காமல் உள்ளவனே புத்து உள்ளவன் ஆவான் – என்றும், ந விச்வாஸ: க்வசித் கார்யோ விசேஷாத்து கலௌ யுகே | பாபிஷ்டா வாதவர்ஷேண மோஹயந்த்ய விசக்ஷணாந் – யாரிடமும் மிகவும் எளிதாக விச்வாஸம் கொள்ளக்கூடாது. குறிப்பாக கலியுகத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பாபம் நிறைந்தவர்கள் தகாத வாதங்களால் மயக்குவார்கள் – என்றும், கோபயந்நாசரேத் தர்மம் நாப்ருஷ்ட: கிஞ்சித் உச்சரேத் | ப்ருஷ்ட: அபி ந வதேத் அர்தம் குஹ்யம் ஸித்தாந்தம் ஏவ ச – தர்மங்களுடைய நுட்பங்களை மறைத்தபடி தர்மம் செய்யவேண்டும். ஒருவன் கேட்காமல் எதனையும் உரைத்தல் கூடாது. அவ்விதம் கேட்கப்பட்டாலும் ரஹஸ்யங்களையும் ஸித்தாந்தங்களையும் வெளியிடக்கூடாது – என்றும், ஆச்ரிதாயாதி பக்தாய சாஸ்த்ர ச்ரத்தாபராய ச | ந்யாயேந ப்ருச்சதே ஸர்வம் வக்தவ்யம் சௌசயோகிநே – ஆழ்ந்த பக்தியுடனும், சாஸ்த்ரங்களின் மீது மிகுந்த ஈடுபாட்டுடனும், தூய்மையுடனும் வந்து தகுந்த ந்யாயத்துடன் வேண்டி நிற்பவனுக்கு அனைத்து சாஸ்த்ரங்களையும் உபதேசித்தல் வேண்டும் – என்றும், ஆத்ம பூஜார்த்தம் அர்தார்தம் டம்பார்தம் அபி கிந்நதீ: | அயோக்யேஷு வதந் சாஸ்த்ரம் ஸந்மார்காத் ப்ரச்யுதோ பவேத் – தன்னை மற்றவர்கள் வணங்கவேண்டும் என்பதற்காகவும், செல்வத்தை ஈட்டுவதற்காகவும், டம்பத்திற்காகவும் தகுதி அற்றவர்களுக்கு சாஸ்த்ரங்களை உரைத்தல் கூடாது. அவன் துன்ப நிலையில் இருந்தபடி அவ்விதம் செய்தாலும் முறை தவறியவனே ஆகிறான் – என்றும், ஊஷரே நிவபேத்விஜம் ஷண்டே கந்யாம் ப்ரயோஜயேத் | ஸ்ருஜேத்வா வாநரே மாலாம் நாபத்ரே சாஸ்த்ரம் உத்ஸ்ருஜேத் – உவர் நிலைத்தில் விதையை விதைக்கலாம், நபும்ஸகனுக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கலாம், குரங்கிடம் மலர்மாலையை அளிக்கலாம், ஆனால் தகாதவனுக்கு சாஸ்த்ரத்தை உபதேசம் செய்தல் கூடாது – என்றும், ஸாத்யகி தந்த்ரம் - ந நாஸ்திகாயாந்ருஜவே நாபக்தாய கதாசந | நைவ ஹிம்ஸாபிருசயே ந லுப்தாய விசேஷத: நாஸ்திகன், நேர்மை அற்றவன், பக்தி அற்றவன், மற்றவர்களுக்குத் துன்பம் செய்பவன், லோபி ஆகியோருக்கு எப்போதுமே உயர்ந்த இந்த மந்த்ரத்தைக் கூறுதல் ஆகாது – என்றும், ஸாத்யகி தந்த்ரம் - தாதவ்யோ மந்த்ரராஜ: அயம் மந்த்ர: அயம் ந ஹி தாத்ருச: | ருஜவே குருபக்தாய வைஷ்ணவாய விசேஷத: || ஸர்வப்ராண்யநுகூலாய தாதவ்யோ தேசிகேந து - இப்படிப்பட்டவர்களுக்கு மந்த்ரராஜமான இதனை உரைத்தல் கூடாது. நேர்மை உள்ளவன், ஆசார்ய பக்தி கொண்டவன், விஷ்ணுவை ஆராதிப்பவன், அனைத்து உயிர்களுக்கும் நன்மையைச் செய்பவன் ஆகியோருக்கு இந்த மந்த்ரத்தை உபதேசிக்கலாம் – என்றும்.