Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 3)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம்
உபதேசங்களை யாருக்கு உபதேசம் செய்யவேண்டும், செய்யக்கூடாது
மூலம் – “நாவேதநிஷ்டா ஜநஸ்ய ராஜந் ப்ரதேயம் ஏதத் பரமம் த்வயா பவேத் | விவித் ஸமாநஸ்ய விபோதகாரகம் ப்ரபோதஹேதோ: ப்ரணதஸ்ய சாஸநம்”, “ந தேயம் ஏதச்ச ததா அநுதாத்மநே சடாய க்லீபாய ந ஜிஹ்யபுத்தயே | ந பண்டிதஜ்ஞாய பரோபதாபிநே தேயம் த்வயேதம் விநிபோத யாத்ருசே”, “ச்ரத்தாந்விதாயத குணாந்விதாய பராபவாதாத்விரதாய நித்யம் | விசுத்தயோகாய புதாய சைவ க்ரியாவதே அத க்ஷமிணே ஹிதாய”, “விவிக்த சீலாய விதிப்ரியாய விவாதபீதாய பஹுச்ருதாய | விஜாநதே சைவ ததா ஹிதக்ஷமாதமாய நித்யாத்ம ஸமாய தேஹிநாம்”, “ஏதைர் குணைர் ஹீநதமே ந தேயம் ஏதத் பரம் ப்ரஹ்ம விசுத்தமாஹு: | ந ச்ரேயஸா யோக்ஷ்யதி தாத்ருசே க்ருதம் தர்ம ப்ரவக்தாரமபாத்ரதாநாத்”, “ப்ருத்வீமாம் யத்யபி ரத்நபூர்ணாம் தத்யாந்ந தேயம் த்விதமவ்ரதாய | ஜிதேந்த்ரியாயைதத ஸம்சயம் தே பவேத் ப்ரதேயம் பரமம் நரேந்த்ர”, “கரால மா தே பயமஸ்து கிஞ்சித் ஏதத் பரம் ப்ரஹ்ம ச்ருதம் த்வயா அத்ய | யதாவத் உக்தம் பரமம் பவித்ரம் விசோகம் அத்யந்தம் அநாதிமத்யம்”
– மஹாபாரதம் சாந்திபர்வம் (313-33 முதல் 38: வசிஷ்டர் உரைப்பது) - நாவேதநிஷ்டா ஜநஸ்ய ராஜந் ப்ரதேயம் ஏதத் பரமம் த்வயா பவேத் | விவித் ஸமாநஸ்ய விபோதகாரகம் ப்ரபோதஹேதோ: ப்ரணதஸ்ய சாஸநம் – ராஜனே! உண்மையை அறியவேண்டும் என்று விருப்பம் கொண்டு, அத்தகைய ஞானத்தை அடைவதற்காக வந்து வணங்கி நிற்பவனுக்கு ஞானத்தை அளிக்கவல்ல இந்த சாஸ்த்ரத்தை, வேதங்களில் இழியாதவனுக்கு உபதேசித்தல் கூடாது – என்றும், ந தேயம் ஏதச்ச ததா அநுதாத்மநே சடாய க்லீபாய ந ஜிஹ்யபுத்தயே | ந பண்டிதஜ்ஞாய பரோபதாபிநே தேயம் த்வயேதம் விநிபோத யாத்ருசே – இதனைப் பொய் கூறுபவனுக்கும், வஞ்சகம் நிறைந்தவனுக்கும், நபும்ஸகனுக்கும், தாழ்ந்த புத்தி கொண்டவனுக்கும், தன்னை மேதையாக எண்ணுபவனுக்கும், மற்றவர்களைத் துன்புறுத்துபவனுக்கும் உரைத்தல் கூடாது; யாருக்கு உரைக்கலாம் என நான் கூறக் கேட்பாயாக – என்றும், ச்ரத்தாந்விதாயத குணாந்விதாய பராபவாதாத்விரதாய நித்யம் | விசுத்தயோகாய புதாய சைவ க்ரியாவதே அத க்ஷமிணே ஹிதாய || விவிக்த சீலாய விதிப்ரியாய விவாதபீதாய பஹுச்ருதாய | விஜாநதே சைவ ததா ஹிதக்ஷமாதமாய நித்யாத்ம ஸமாய தேஹிநாம் – ச்ரத்தை நிறைந்தவனுக்கும், சிறந்த குணங்கள் கொண்டவனுக்கும், மற்றவர்களைத் தூற்றாதவனுக்கும், சிறந்த வாதங்களை ஏற்பவனுக்கும், உபதேசங்களை உள்வாங்கும் திறன் கொண்டவனுக்கும், சிறந்த ஒழுக்கம் உள்ளவனுக்கும், கர்மங்களை இயற்றும்போது உண்டாகும் துன்பங்களைப் பொறுப்பவனுக்கும், உலகத்திற்கு நன்மையை மட்டுமே விரும்புபவனுக்கும், தனிமையில் வசிக்க விரும்புபவனுக்கும், சாஸ்த்ரங்களை அறிவதில் மகிழ்பவனுக்கும், பயனற்ற வாதங்களைக் கண்டு அஞ்சுபவனுக்கும், ஆசார்யனிடமிருந்து அறிந்தவனுக்கும், செய்ந்நன்றி நிறைந்தவனுக்கும், பொறுமை மற்றும் இரக்கம் நிறைந்தவனுக்கும், நித்யமாக உள்ள அனைத்து ஆத்மாக்களையும் தன்னைப் போன்றே எண்ணுபவனுக்கும் உபதேசிக்கலாம் – என்றும், ஏதைர் குணைர் ஹீநதமே ந தேயம் ஏதத் பரம் ப்ரஹ்ம விசுத்தமாஹு: | ந ச்ரேயஸா யோக்ஷ்யதி தாத்ருசே க்ருதம் தர்ம ப்ரவக்தாரமபாத்ரதாநாத் – இத்தகைய நற்குணங்கள் அற்றவனுக்கு, தூய்மையான பரப்ரஹ்மம் குறித்து உபதேசிக்கும் இந்தச் சாஸ்த்ரத்தை உபதேசம் செய்தல்கூடாது என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். இதனை மீறி உபதேசம் செய்தால் எந்தவிதமான நன்மையும் உண்டாகாது – என்றும், ப்ருத்வீமாம் யத்யபி ரத்நபூர்ணாம் தத்யாந்ந தேயம் த்விதமவ்ரதாய | ஜிதேந்த்ரியாயைதத ஸம்சயம் தே பவேத் ப்ரதேயம் பரமம் நரேந்த்ர – ராஜனே! இந்த உலகில் உள்ள அனைத்து இரத்தினங்களையும் தக்ஷிணையாக அளித்தால் கூட, வ்ரதம் இல்லாத ஒருவனுக்கு இந்தச் சாஸ்த்ரத்தை உபதேசித்தல் கூடாது. புலன்களைத் தன்வசப்படுத்திய ஒருவனுக்கு, இதனை உபதேசிக்கலாம் – என்றும், கரால மா தே பயமஸ்து கிஞ்சித் ஏதத் பரம் ப்ரஹ்ம ச்ருதம் த்வயா அத்ய | யதாவத் உக்தம் பரமம் பவித்ரம் விசோகம் அத்யந்தம் அநாதிமத்யம் – ராஜனே! நீ அச்சம் கொள்ளவேண்டாம். பரப்ரம்ஹம் குறித்த சாஸ்த்ரத்தை நீ இப்போது கேட்டாய். தொடக்கம், மத்யம் மற்றும் முடிவு அற்றதும் துன்பம் இல்லாததும் தூய்மையானதும் ஆகிய பரப்ரஹ்மம் குறித்து உனக்கு உள்ளது உள்ளபடி கூறப்பட்டது – என்றும் கூறியது காணலாம்.