Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 2)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம்
உபதேசங்களை யாருக்கு உபதேசம் செய்யவேண்டும், செய்யக்கூடாது
மூலம் – இப்படி “குருர்கரீயாந்” என்றும், “தமிமம் ஸர்வஸம்பந்நம் ஆசார்யம் பிதரம் குரும்” என்றும் சொல்லுகிறபடியே, பரமாசார்யனான ஸர்வேச்வரன் முதலாக ஸதாசார்ய ஸம்ப்ரதாய ஸமாகதங்களாய் ஸம்ஹீ ஸ்தந்யம் போலே விஜாதீயர்க்கு ரஸம் தெரியாத ரஹஸ்ய த்ரயார்த்தங்களை ஸங்க்ரஹேண சேர்த்துத் தாங்களும் அநுஸந்தித்து, “யோ கோபாயதி அயோக்யாநாம் யோக்யாநாம் ஸம்ப்ரயச்சதி | இமம் அர்த்தம் ஸ மாந்யோ மே ஸ்வஸ்தி வ: அஸ்து வ்ரஜாமி அஹம்”, “இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந | ந சாசுச்ருஷவே வாச்யம் ந ச மாம் ய: அப்யஸூயதி”, “ய இமம் பரமம் குஹ்யம் மத் பக்தேஷு அபி தாஸ்யதி | பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்ய ஸம்சய:”
– இப்படியாக கீதை (11-43) – குரூர்கரியாந் – நீயே குருவாகவும் செயலாற்றுகிறாய் – என்றும், மஹாபாரதம் சபாபர்வம் (41-21) - தமிமம் ஸர்வஸம்பந்நம் ஆசார்யம் பிதரம் குரும் – ஸஹாதேவன், “ஆசார்யனாகவும், தந்தையாகவும், குருவாகவும் உள்ள க்ருஷ்ணனே அனைத்துவிதங்களிலும் கொண்டாடத்தக்கவன்” – என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனே முதல் ஆசார்யனாக உள்ளான். அவனிடமிருந்து நமது ஸம்ப்ரதாய ஆசார்ய பரம்பரை தொடங்குகிறது. இத்தகைய ஆசார்யர்களால் மூன்று மந்த்ரங்களுடைய (திருமந்த்ரம், த்வயம், சரமச்லோகம்) ஆழ்பொருள்கள் ஒன்றாகத் திரட்டப்பட்டு, எல்லையற்ற சுவையுடன் கூடியதாக அளிக்கப்படுகிறது. பெண் சிங்கத்தின் பாலுடைய சுவையை அறியாதவர்கள் போன்று, மற்ற மதத்தினரால் இந்தச் சுவையை அறிய இயலாது. இந்த மூன்று மந்த்ரங்களுடைய ஆழ்பொருளைச் சுருக்கி, அதனையே ஆசார்யன் எப்போதும் எண்ணியபடி உள்ளார். அதன் பின்னர் அவர் எவ்விதம், யாருக்கு உபதேசிக்கவேண்டும் என்பதை அடுத்துள்ள பல ச்லோகங்கள் கூறுகின்றன: ஸாத்வத ஸம்ஹிதை (24-375) - யோ கோபாயதி அயோக்யாநாம் யோக்யாநாம் ஸம்ப்ரயச்சதி | இமம் அர்த்தம் ஸ மாந்யோ மே ஸ்வஸ்தி வ: அஸ்து வ்ரஜாமி அஹம் – இந்த ஆழ்பொருளைக் கேட்கும் தகுதி இல்லாதவர்களுக்கு இவற்றை மறைத்தும், கேட்கும் தகுதி உள்ளவர்களுக்கு இவற்றை உபதேசித்தும் செய்பவர்கள் என்னால் கொண்டாடப்படுகிறார்கள். அவர்களுக்கு நன்மையே உண்டாகும் என நான் உரைக்கிறேன் – என்றும், கீதை (18-67) - இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந | ந சாசுச்ருஷவே வாச்யம் ந ச மாம் ய: அப்யஸூயதி – இவ்விதம் நான் உனக்கு உபதேசித்தவற்றை தவம் புரியாதவனுக்கும், பக்தி அற்றவனுக்கும், கேட்பதற்கு விருப்பம் அற்றவனுக்கும், என்னிடம் பொறாமை கொண்டவனுக்கும் உபதேசித்தக் கூடாது – என்றும், கீதை (18-68) - ய இமம் பரமம் குஹ்யம் மத் பக்தேஷு அபி தாஸ்யதி | பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்ய ஸம்சய: - யார் ஒருவன் என்னிடம் மிகுந்த ப்ரேமையுடன் கூடிய பக்தி கொண்டவனாக இருந்தபடி, இந்த உயர்ந்த சாஸ்த்ரத்தை எனது பக்தர்களுக்கு உரைப்பானோ, அவன் என்னையே அடைகிறான் என்பதில் ஐயம் இல்லை – என்றும் கூறப்படுகிறது.