Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 1)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 30.ஆசார்ய க்ருத்ய அதிகாரம்
மூலம் – அதிஜிகமிஷு: ஆத்யம் தாம திவ்யம் த்ரிதாம்ந: ச்ருத விவித பரீக்ஷா சோதிதே க்வ அபி பாத்ரே அநக குண தசாயாம் ஆஹித ஸ்நேஹம் ஆர்ய: ப்ரதிசதி நிரபாயம் ஸம்ப்ரதாய ப்ரதீபம்
– திருப்பாற்கடல், ஸூர்யமண்டலம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய மூன்று உயர்ந்த இடங்களைக் கொண்டுள்ளவனாகிய ஸர்வேச்வரனுடையதும், முதன்மையானதும், திவ்யமானதும் ஆகிய பரமபதத்தை அடையவேண்டும் என்று விரும்பும் ஆசார்யன் செய்வது என்னவென்றால்: தகுந்த சாஸ்த்ரங்களில் கூறப்பட்டதான பலவிதமான சோதனைகள் மூலம் தகுதியானவன் என்று ஏற்கப்படும் ஒரு சிஷ்யனைத் தேர்ந்தெடுக்கிறார்; அப்படிப்பட்ட உயர்ந்த குணங்கள் கொண்ட அந்த சிஷ்யன் என்னும் விளக்கில், மிகுந்த வாத்ஸல்யம் என்னும் எண்ணெயை ஊற்றி, அழிவற்றதான ஸம்ப்ரதாயம் என்னும் தீபத்தை அளிக்கிறார்.