Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 171)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
வ்யாஸ ஆம்நாய பயோதி கௌஸ்துபநிபம் ஹ்ருத்யம் ஹரே: உத்தமம் ச்லோகம் கேசந லோக வேத பதவீ விச்வாஸித அர்த்தம் விது: யேஷாம் உக்திஷு முக்தி ஸௌத விசிகா ஸோபாந பங்க்திஷு அமீ வைசம்பாயந சௌநக ப்ரப்ருதய: ச்ரேஷ்டா: சிர: கம்பிந:
– பகவான் வ்யாஸருடைய வேதமாகிய மஹாபாரதம் என்ற ஸமுத்ரத்தில் உண்டானதும், பகவானுக்கு இனிமையான கௌஸ்துப மணி போன்றதும் ஆகிய சரமச்லோகமானது, “சரணாகதி” என்னும் ஆழ்பொருள் கொண்டது என்பதை லோகத்தில் உள்ள வசனங்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் நம்முடைய பூர்வாசார்யர்கள் ஆழ்ந்த விச்வாஸத்துடன் அறிந்தனர். முக்தி என்னும் மாடமாளிகைக்குக் கொண்டு செல்லக்கூடிய படிக்கட்டுகளாக உள்ள இந்த ஆசார்யர்களுடைய சொற்களைக் கேட்டு, வைசம்பாயநர் சௌநகர் முதலான உயர்ந்தவர்கள் பலரும் தங்களுடைய தலையை அசைத்து இந்தக் கருத்துக்களுக்குச் சம்மதம் தெரிவிக்கிறார்கள்.