Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 170)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
குறிப்புடன் மேவும் தர்மங்களின்றி அங்கோவலனார் வெறித்துளவக்கழல் மெய்யரணென்று விரைந்தடைந்து பிரித்த வினைத்திரள் பின்தொடராவகை அப்பெரியோர் மறிப்புடை மன்னருள் வாசகத்தால் மருளற்றனமே
– மிகுந்த மன ஒருமைப்பாட்டுடன் செய்யவேண்டியதான பக்தியோகம் முதலான உபாயங்களைப் பின்பற்ற இயலாமல், நறுமணத்துடன் கூடிய துளசியைக் கொண்டதான க்ருஷ்ணனுடைய திருவடிகளையே தகுந்த உபாயம் என்று கொண்டு, அதனையே மிகவும் விரைவாக அடையும்படியாக ஆனோம். இதன் காரணமாக நம்மிடமிருந்து அகற்றப்பட்ட பாபங்கள் நம்மிடம் மீண்டும் வராதபடியாக நின்றோம். நம்மை வளைத்துக் கொண்டு வசப்படுத்துகின்ற க்ருஷ்ணனுடைய உறுதியான க்ருபை காரணமாக உண்டான சரமச்லோகத்தால், நம்முடைய அறியாமைகள் நீங்கப்பெற்றோம்.