Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 169)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ஏகம் ஸர்வப்ரதம் தர்மம் ஸ்ரீயா ஜுஷ்டம் ஸமாச்ரிதை: அபேத சோகைராசார்யை: அயம் பந்தா: ப்ரதர்சித:

– “இது மட்டுமே” என்றுள்ளதாகவும், அனைத்து பலன்களையும் அளிப்பதாகவும், பெரியபிராட்டியுடன் கூடியுள்ளதாகவும் இருக்கின்ற ஸித்தோபாயமாகிற ஸர்வேச்வரனை அடைந்தவர்களும், இதன் விளைவாகத் தங்கள் துன்பம் அனைத்தும் நீங்கப் பெற்றவர்களும் ஆகிய நம்முடைய ஆசார்யர்களால் இந்த ப்ரபத்தி வழியானது நமக்கு நன்றாக விளக்கப்பட்டது.