Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 167)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

சரமச்லோகத்தினுடைய ஆழ்பொருள்கள் சுருக்கம்

மூலம் – இச் ச்லோகத்தில் பதங்களில் அடைவே (1) அதிகாரி விசேஷம், ஆகிஞ்சந்ய புரஸ்காரம், துஷ்கர பரிகராந்தர நைரபேக்ஷ்யம், அசக்ய ப்ரவ்ருத்தி அநைசித்யம், துஷ்கர அபிநிவேச வையர்த்யம், உபாய விசேஷத்தின் கணையுடைமை. (2) முமுக்ஷுவுக்கு சரண்ய விசேஷம், சரண்யனுடைய ஸுலபத்வ ஸுசீலத்வாதி குணபூர்ணத்வம், ஹித தம உபதேசித்வம். (3) ப்ராப்யனே ப்ராபகனானமை, நிரபேக்ஷ ஸர்வ விஷய நிஷ்ப்ரத்யூஹ கர்த்ருத்வம், வ்யாஜமாத்ர ப்ரதீக்ஷத்வம், உபாயாந்தர வ்யவதாந நிரபேக்ஷத்வம், பரிகராந்தர நிரபேக்ஷ ப்ரஸாத்யத்வம், ஸர்வ பலார்தி சரண்யத்வம், சரண்யாந்தர பரிக்ரஹ அஸஹத்வம், சரண்ய வைசிஷ்டயம். (4) உபயாந்தர ஸ்தாந நிவேச்யத்வம், பர ஸ்வீகர்த்ருத்வம். (5) பரந்யாஸ ரூப ஸாத்யோபாய விசேஷம், அதின் பரிகரங்கள், ஸர்வாதிகாரத்வம், ஸக்ருத்கர்தவ்யத்வம், ஸுக்ரத்வம், அவிளம்பித பல ப்ரதத்வம், ப்ராரப்த நிவர்த்தந க்ஷமத்வம். (6) அதிகாரியினுடைய பராதீந கர்த்ருத்வம், சாஸ்த்ர வச்யத்வம். (7) ரக்ஷகனுடைய பரமகாருணிகத்வம், ஸுப்ரஸந்நத்வம், நிரங்குச ஸ்வாதந்த்ர்யம், துர்நிவாரத்வம், பராநபேக்ஷத்வம், அவஸர ப்ரதீக்ஷத்வம். (8) சரண்யகதனுடைய க்ருதக்ருத்யத்வம், பரிக்ருஹீத உபாய தத் பலங்களைப் பற்றக் கர்த்தவ்யாந்தரத்தில் ப்ராப்தியில்லாமை, பகவதத்யர்த்த ப்ரியத்வம். (9) த்ரைகாலிக விரோதி பூயஸ்த்வம், விரோதி வர்க வைசித்ரயம். (10) அவற்றினுடைய ஈச்வர ஸங்கல்பமாத்ர நிவர்த்யத்வம், ப்ரபந்நேச்சா நியதமான விரோதி நிவ்ருத்தி காலம், விரோதி நிவ்ருத்தி ஸ்வரூபம், ஆத்ம கைவல்ய வ்யாவ்ருத்த யதாவஸ்தித ஸ்வரூபாவிர்பாவம், பரிபூர்ண பகவதநுபவம், ஸர்வவித கைங்கர்யம், அபுநராவ்ருத்தி. (11) முன்பு சோக ஹேது ப்ராசுர்யம், பின்பு சோகிக்கப் ப்ராப்தியில்லாமை, விமர்ச காலமெல்லாம் நிஸ்ஸம்யத்வம், சோக நிவ்ருத்தி, நிர்பயத்வம், ஹர்ஷ விசேஷம், சரீரபாத கால ப்ரதீக்ஷத்வம், நிரபராத கைங்கர்ய ரஸிகத்வம் என்று இவை ப்ரதாநமாய் மற்றும் இவற்றுக்கு அபேக்ஷிதங்களெல்லாம் சப்த சக்தியாலும் அர்த்த ஸ்வபாவத்தாலும் அநுசிஷ்டங்கள்.

– [மேலே உள்ளவற்றில் காணப்படும் எண்கள், சரம ச்லோகத்தில் உள்ள அந்தந்த பதங்களுடைய ஆழ்பொருள் ஆகும். அவையாவன - (1) ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய, (2) மாம், (3) ஏக, (4) சரண, (5) வ்ரஜ என்பதன் தாதுப்பகுதி, (6) வ்ரஜ என்பதன் விகுதி, (7) அஹம், (8) த்வா, (9) ஸர்வ பாப, (10) மோக்ஷயிஷ்யாமி, (11) மா சுச: - என்பவை ஆகும்] சரமச்லோகத்தில் உள்ள பதங்களில் பின்வரும் கருத்துக்கள் மறைந்துள்ளன: (1) இந்த உபாயத்திற்குத் தகுதியான அதிகாரியின் சிறப்பு, மற்ற எந்தவிதமான உபாயமும் அற்று இருத்தல், செய்வதற்குக் கடினமான அங்கங்களை எதிர்பாராமல் இருத்தல், ஒருவனுடைய சக்திக்கு மீறிய செயல்களைச் செய்யவேண்டிய அவசியம் இன்மை (அல்லது அது போன்ற செயல்களில் முனைதலின் பொருத்தம் இன்மை), இயலாத செயல்களில் ஈடுபடுவதால் எந்தப் பலனும் கிட்டாமல் போதல், இந்த உபாயமானது மற்ற உபாயங்களைப் பொருத்துக் கொள்ளாமை (2) முமுக்ஷுவுக்கு அனைத்துவிதத்திலும் ஏற்றவனாக அவன் மட்டுமே இருத்தலின் சிறப்பு, சரணம் அடையத்தக்கவனுடைய எளிமையாக அடையத்தக்கவனாக இருத்தல் மற்றும் சிறந்தவனாக இருத்தல் ஆகிய குணங்களுடைய முழுமை அடைந்த நிலை, நன்மை பயக்கவல்லவற்றை மட்டுமே உபதேசிக்கும் தன்மை (3) அடையத்தக்கவனாக இருப்பவனே தன்னை அடைவதற்கான உபாயமாகவும் உள்ள நிலை, எந்தவிதமான இடையூறும் இன்றி வேறு எதனுடைய துணையையும் எதிர்பாராமல் தனித்து நின்று எந்த ஒரு செயலையும் செய்யும் தன்மை, ஒருவனைக் காப்பதற்காக அந்த மனிதனிடமிருந்து ஏதோ ஒரு சிறிய வாய்ப்பை மட்டுமே எதிர்பார்க்கும் தன்மை, மற்ற எந்தவிதமான உபாயங்களையும் எதிர்பாராத தன்மை, மற்ற எந்தவிதமான அங்களையும் எதிர்பாராத தன்மை, அனைத்து பலன்களையும் அளிக்கவல்லதான சரணம் புகும்படி உள்ள தன்மை, மற்ற யாரையும் சரணம் புகத்தக்கவர்களாகக் கொள்ளுதலைப் பொறுக்க இயலாத தன்மை, பெரியபிராட்டியும் சேர்ந்து உபாயமாக உள்ள தன்மை (4) மற்ற உபாயங்களின் இடத்தில் நிற்கக்கூடிய தன்மை, மற்றவர்களுடைய பாரத்தை ஏற்றுக்கொண்டு அவர்களுக்காகச் செயலாற்றும் தன்மை (5) ஒருவன் தன்னைக் காப்பாற்றும் பொறுப்பை ஒப்படைக்கும்விதமாக உள்ள ஸாதனம், அதன் அங்கங்கள், அந்த உபாயத்தை அனைவரும் கைக்கொள்ளலாம்படி உள்ள தன்மை, ஒருமுறை மட்டுமே இயற்றபடக்கூடியதாக உள்ள தன்மை, மிகவும் எளிதாக இயற்றக்கூடியதாக உள்ள தன்மை, பலன் அளிப்பதில் தாமதம் இல்லாத தன்மை, பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட பூர்வகர்மங்களையும் விலக்கக்கூடிய தன்மை (6) இந்த உபாயத்தைக் கைக்கொள்ளும் அதிகாரி ஸர்வேச்வரனை அல்லாமல் வேறு எதற்கும் வசப்படாத தன்மை, சாஸ்த்ரங்களுக்குக் கட்டுப்பட்ட தன்மை (7) காப்பாற்றுபவனுடைய மிக உயர்ந்த கருணை, எப்போதும் க்ருபையுடன் கூடிய தன்மை, சுருக்கம் அடையாத சுதந்திர தன்மை, தவிர்க்க முடியாதபடி உள்ள தன்மை, வேறு உதவிகளை எதிர்பாராத தன்மை, காப்பதற்கான தருணைத்தை எதிர்பார்க்கும் தன்மை (8) சரணம் புகுந்தவனுடைய செய்யவேண்டியதைச் செய்துமுடித்த தன்மை, தான் கைக்கொள்கின்ற உபாயம் மற்றும் அதன் பலன் ஆகியவற்றைப் பெறுவதற்காக வேறு எதிலும் ஈடுபடக்கூடாது என்னும் தன்மை, பகவானுக்கு மிகவும் ப்ரியமானவனாக உள்ள தன்மை (9) மூன்றுகாலங்களிலும் முக்திக்கு உண்டாகக்கூடிய தடைகள், பலவிதமான வடிவங்களில் முக்திக்குத் தடையாக உள்ளவை (10) அந்தத் தடைகள் அனைத்தும் பகவானுடைய வெறும் ஸங்கல்பத்தாலேயே நீங்கும் நிலை, இவை எப்போது விலகவேண்டும் என்று ப்ரபந்நன் நினைக்கிறானோ அப்போதும் நீங்கும் நிலை, இந்த விரோதிகள் நீங்கும் விதங்கள், ஆத்மாவை அனுபவித்தல் என்பதைக் காட்டிலும் வேறுபட்டதான தனது ஆத்மாவின் உண்மையான ஸ்வரூபம் உள்ளது உள்ளபடி வெளிப்படுதல், முழுமையான பகவத் அனுபவம், பகவானுக்கு அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்தல், மீண்டும் ஸம்ஸாரத்திற்குத் திரும்பாமை (11) உபாயத்தைக் கைக்கொள்வதற்கு முன்பாக சோகம் நீடிப்பதற்கான காரணம், உபாயத்தைக் கைக்கொண்ட பின்னர் சோகத்திற்கான அவசியம் இன்மை, மேலும் உள்ள காலங்கள் அனைத்திலும் எந்தவிதமான ஐயமும் அற்ற நிலை, சோகங்கள் அனைத்தும் விலகுதல், பயம் அற்ற நிலை, மிகுந்த சிறப்பான மகிழ்ச்சி, எப்போது எந்தச் சரீரம் விலகும் என்று அந்தக் காலத்தை எதிர்நோக்குதல், எந்தவிதமான தோஷங்களும் அற்ற கைங்கர்யங்களைச் செய்தல் இது போன்ற முதன்மையான பலவும் மற்றும் இவற்றால் எதிர்பார்க்கப்படும் மற்ற அனைத்தும், சரமச்லோகத்தில் உள்ள சொற்களுடைய வலிமை மற்றும் ஆழ்பொருள்களை வெளிப்படுத்தும் இயல்பு ஆகியவற்றால் உணரலாம்படி உள்ளன.