Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 164)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“மா சுச:” என்னும் சொற்றொடருக்குப் பத்துவிதமான பொருள்கள்

மூலம் – (10) அநந்ய ப்ரயோஜநனாய் ப்ரபந்நனான இவனுக்குப் ப்ரதிபந்தகங்களான ஸர்வபாபங்களும் கழிகையாலே கேவல ஆத்ம அநுபவாதிகளான அந்தரயங்களாலே பரம பலத்துக்கு விளம்பம் வருகிறதோவென்று சோகிக்க வேண்டா.

– மற்ற எந்த பலன்களையும் நாடாமல் ப்ரபத்தியைக் கைக்கொண்ட ஒருவனுக்கு, மோக்ஷம் பெறுவதில் இடையூறாக இருந்த அனைத்து பாபங்களும் (கர்மங்கள்) நீங்குவதால், ஆத்ம அனுபவம் என்பது போன்றவற்றால் மிகவும் உயர்ந்த பலனாகிய மோக்ஷத்தை அடைவதில் காலதாமதம் உண்டானால் என்ன செய்வது என்று சோகம் அடையவேண்டாம்.