Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 163)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“மா சுச:” என்னும் சொற்றொடருக்குப் பத்துவிதமான பொருள்கள்

மூலம் – (9) இச் சரீராந்தரம் மோக்ஷம் பெறவேண்டுமென்று காலங்குறிக்கையாலே, ஜந்மாந்தராதி ஹேதுக்களான ப்ராரப்த கர்ம விசேஷங்களாலே நமக்கு ஜந்மாந்தரங்கள் வரில் செய்வதென் என்று சோகிக்க வேண்டா.

இந்தச் சரீரம் முடிந்தவுடன் மோக்ஷம் அடையவேண்டும் என்று சேதநன் விரும்புவதால், அடுத்த ஜன்மத்தை உண்டாக்கக் காரணமாக உள்ளதான “பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட கர்மங்கள்” என்பதன் விளைவாக, பல பிறவிகள் உண்டானால் என்ன செய்வது என்று சோகம் அடையவேண்டாம்.