Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 161)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“மா சுச:” என்னும் சொற்றொடருக்குப் பத்துவிதமான பொருள்கள்

மூலம் – (7) ஆர்த்தி ப்ரபந்நனுக்கு அப்போதே பல ஸித்தியுண்டாம்படி இருக்கையாலே “தேஹே சேத் பரீதிமான் மூடோ பவிதா நரகே அபி ஸ:” என்னும்படி நரக துல்யமான இச்சரீரம் அநுவர்த்திக்கிறதோ என்று சோகிக்கவேண்டா.

– ஒரு க்ஷணமும் கூட காலதாமதத்தைப் பொறுக்க இயலாமல் உள்ள ஆர்த்தி ப்ரபந்நன் ஒருவனுகு, நான் அப்போதே மோக்ஷம் அளிக்கிறேன். ஆகவே ஸ்ரீவிஷ்ணு புராணம் (1-17-63) - தேஹே சேத் பரீதிமான் மூடோ பவிதா நரகே அபி ஸ: - சரீரத்தில் அன்பு வைக்கும் மூடன் ஒருவன் நரகத்தில் ஈடுபடுவான் – என்று கூறுவதற்கு ஏற்ப நரகத்திற்குச் சமமான இந்தச் சரீரம் நீடித்தபடி இருக்குமோ என்னும் துக்கம் வேண்டாம்.