Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 158)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“மா சுச:” என்னும் சொற்றொடருக்குப் பத்துவிதமான பொருள்கள்
மூலம் – (4) இவ் உபாயாநுஷ்டாநத்துக்குப் பின்பு ஆஜ்ஞா அநுஜ்ஞைகளாலே பண்ணும் ஸத் கர்மங்களெல்லாம் இப் ப்ரபத்திக்கு அங்கமல்லாமையாலே அவற்றுக்கு தேச காலாதி வைகுண்யத்தாலே சில வைகல்பம் உண்டானாலும், உபாஸநத்துக்குப் போல் இதுக்குப் பரிகர வைகல்பம் பிறக்கிறதோவென்று சோகிக்க வேண்டா.
– ப்ரபத்தைக் கைக்கொண்ட பின்னர், பகவானின் கட்டளைகள் என்றோ அல்லது பகவானுடைய அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்று எண்ணியோ செய்யப்படுகின்ற நற்செயல்கள் எதுவும் ப்ரபத்திக்கு அங்கங்களாக இருப்பதில்லை. ஆகவே அத்தகைய நித்யகர்மங்கள் முதலானவற்றை இயற்றும்போது காலம் மற்றும் இடம் ஆகியவை காரணமாக அந்தக் கர்மங்களுக்கு ஏதேனும் குறைகள் உண்டானாலும், இதன் மூலம் அங்கங்களுக்குக் குறைகள் உண்டாகுமோ என்று எண்ணி சோகம் கொள்ளவேண்டாம்.