Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 157)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“மா சுச:” என்னும் சொற்றொடருக்குப் பத்துவிதமான பொருள்கள்
மூலம் – (3) இப்படி லகூபாயமாத்ரத்தாலே வசீகார்யனாய்ப் பல ப்ரதாநம் பண்ணவிருக்கிற சரண்யன் ஸர்வஸுலபனாய், விச்வாஸநீயதமனாய், பரமகாருணிகனாய் நிரங்குச ஸ்வாதந்த்ர்யனாய் இருக்கையாலே ஸித்தோபாயத்தைப் பற்ற சோகிக்க வேண்டா.
– இவ்விதம் உள்ளதான மிகவும் எளிய ப்ரபத்தி உபாயம் மூலம் வசப்பட்டு நிற்பவனும், பலனை அளிப்பவனும், அனைவராலும் சரணம் புகத்தக்கவனும் ஆகிய ஸர்வேச்வரன் அனைவராலும் அடைவதற்கு எளியவனாகவும், நம்பத்தக்கவனாகவும், மிகுந்த கருணை கொண்டவனாகவும், சுருக்கமும் தடையும் இல்லாத சுதந்திரம் கொண்டவனாகவும் உள்ளான். ஆகவே இப்படிப்பட்ட ஸித்தோபாயமான ஸர்வேச்வரனைப் பற்றுவதற்குச் சோகம் கொள்ளவேண்டாம்.