Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 155)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“மா சுச:” என்னும் சொற்றொடருக்குப் பத்துவிதமான பொருள்கள்

மூலம் – (1) அதில் அநுஷ்டிக்கப் புகுகிற சரணாகதி தர்மம், ஜாதி வர்ண ஆச்ரமாதி விசேஷ நியதமல்லாமையாலே ப்ராப்ய ருசியும், ப்ராபக விச்வாஸமும், ஆகிஞ்சந்ய ஜ்ஞாநாதிகளும் உண்டானபோது ஒருவர்க்கும் “நாம் இதுக்கு அதிகாரிகளல்லோ” மென்று சோகிக்கவேண்டா.

– ப்ரபத்தி உபாயத்தில் உள்ள சரணாகதி தர்மமானது ஜாதி, வர்ணம், ஆச்ரமம் முதலானவற்றைப் பார்ப்பதில்லை. அடையவேண்டியதான மோக்ஷத்தில் ருசி, ப்ரபத்தியில் மஹாவிச்வாஸம், பக்தியோகம் போன்றவற்றைக் கைக்கொள்ள சக்தி இல்லை என்னும் எண்ணம் முதலானவை இருந்தாலே போதுமானது. “நாம் இதற்குத் தகு கொண்டவர்களா?” என்று எண்ணி சோகம் அடையவேண்டியதில்லை.