Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 153)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
மூலம் – இவ் ஆர்த்த த்ருப்தாதி விபாகங்களெல்லாம் ஸக்ருத தாரதம்ய மூலமான பகவதநுக்ரஹ தாரதம்யத்தாலே வரும். “ப்ராரப்த மாத்ர முக்தத்ர தத்த்வவித் ஸுகமாப்நுயாத்” இத்யாதி வசனங்கள், ஆர்த்த ப்ரபந்ந விஷயத்தில் நிரவகாசங்கள். த்ருப்த ப்ரபந்நன் திறத்தில் உத்தர க்ருத்யம்சத்தைப் பற்ற “மா சுச:” என்கிற வாக்யத்தின் கருத்தை “ஆத்யாத்மிக ஆதிபௌதிக” என்று தொடங்கி, “அதஸ்த்வம் தவ தத்வதோ மத் ஜ்ஞாந தர்சந ப்ராப்திஷு நிஸ்ஸம்சய: ஸுகமாஸ்வ” என்று அருளிச்செய்தார்.
– ப்ரபந்நர்களில் உள்ள ஆர்த்தன் மற்றும் த்ருப்தன் என்பதான வேறுபாடுகள், அவரவர்கள் செய்த நற்செயல்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் காரணமாக பகவத் அனுக்ரஹத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகின்றன. “ப்ராரப்த மாத்ர முக்தத்ர தத்த்வவித் ஸுகமாப்நுயாத் – தத்வங்களை அறிந்து ப்ரபத்தியைக் கைக்கொண்ட ஒருவன், பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட கர்ம பலன்களை அனுபவித்தவனாக, அந்தச் சரீரத்தின் முடிவில் மோக்ஷ ஸுகம் அடைவான்” என்பது போன்ற வசனங்கள், ஆர்த்த ப்ரபந்நன் விஷயத்தில் பொருந்தாது. ப்ரபத்திக்குப் பின்னர் த்ருப்த ப்ரபந்நன் ஒருவன் என்ன செய்யவேண்டும் என்பதை “மா சுச: - வருத்தம் கொள்ளாதே” என்னும் வாக்கியத்தின் அடிப்படையில், எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில், “ஆத்யாத்மிக ஆதிபௌதிக” என்று தொடங்கி, “அதஸ்த்வம் தவ தத்வதோ மத் ஜ்ஞாந தர்சந ப்ராப்திஷு நிஸ்ஸம்சய: ஸுகமாஸ்வ – நீ என்னை உள்ளது உள்ளபடி அறிதல், பார்த்தல் மற்றும் அடைதல் ஆகியவற்றில் எந்தவிதமான ஐயமும் கொள்ளாமல் ஸுகமாக இருப்பாயாக”, என்று அருளிச்செய்தார்.