Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 151)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

மூலம் – யோகிகள் யோகவிசேஷத்தாலே தேஹ ந்யாஸம் பண்ணுமாப்போலே, ஆர்த்தி அதிசயமுடையவன் ப்ரபத்தியாலே தேஹ ந்யாஸம் பண்ணுகைக்குத் தீர்த்த ப்ரவேசாதிகளிற்போலே யுகவிசேஷ நியமமுமில்லை. இவ் ஆர்த்த ப்ரபந்நனே எல்லாரிலும் கடுக ஆத்ம ரக்ஷணம் பண்ணுகிறவன்.

– யோகிகள், தங்களுடைய யோகத்தின் சிறப்பு காரணமாக, தாங்கள் விரும்பும்போது தங்களுடைய சரீரத்தை விடுவார்கள் (அதாவது உயிர் துறப்பார்கள்). அது போன்றே ஆர்த்த ப்ரபந்நன் ஒருவன், ஆர்த்தி ப்ரபத்தி மூலம், தனது சரீரத்தை விடுகிறான். தனது உயிரைத் துறப்பதற்கு நீரில் மூழ்குதல் முதலான செயல்களைச் செய்வதற்குக் கலியுகத்தில் சிறப்பான விதிவிலக்கு ஏதும் இல்லை. ஆனாலும், ஆர்த்த ப்ரபந்நனுக்கு இது போன்ற விதிகள் ஏதும் இல்லை. இத்தகைய ஆர்த்த ப்ரபந்நனே, அனைவரைக் காட்டிலும் தனது ஆத்மாவை விரைவாகக் காப்பாற்றிக் கொள்பவன் ஆவான்.