Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 150)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

த்ருப்தஸ்ய து யதா சாஸ்த்ரம் சிரம் ஜீவிதும் இச்சத: ப்ரணரக்ஷண சாஸ்த்ரார்த்த லங்கநம் து அபராதநம்

– சாஸ்த்ரங்கள் தவறாமல் நீண்டகாலம் உயிர் வாழ எண்ணும் த்ருப்த ப்ரபந்நன் ஒருவனுக்கு, உயிரைக் காக்கும்விதத்தில் சாஸ்த்ரங்களில் கூறப்பட்டவற்றை மீறி நடத்தல் (உதாரணமாக தனது சரீரத்தைப் பாதுகாத்தல்) என்பது அபராதமே ஆகும்.