Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 141)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ஸுதுஷ்கரத்வாத் தர்மணாம் அபாரத்வாத் விரோதிநாம் ஸித்த: பல விளம்பவாத் ச சோக: அத்ய விநிவார்யதே

– கர்மயோகம் போன்ற தர்மங்களால் செய்ய இயலாதபடி உள்ளதாலும், பேற்றினை அடைவதற்குத் தடையாக உள்ள எல்லையற்ற பாபங்களாலும், பலனைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தாலும் நேர்கின்ற அனைத்து துக்கங்களும் இந்த உபதேசம் மூலம் விலக்கப்பட்டன.