Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 131)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
தடைகள் விலகுதல் மற்றும் விருப்பம் நிறைவேறுதல்
மூலம் – “ஏக” சப்தத்துக்கு உபாய பலைக்யம் பொருளானபோது, இவ் இஷ்டப்ராப்தியும் இச் ச்லோகத்திலே ஸுவ்யக்தமாகச் சொல்லிற்றாம். கீழில் ச்லோகத்திலே விசதமாகச் சொன்ன அர்த்தம் இங்கு ப்ராப்தி விரோதியைக் கழிக்கையாலும், “ஏக” சப்தத்தில் விவக்ஷாவிசேஷத்தாலும் சொல்லிற்றாம். ஆன பின்பு இது ஸாபேக்ஷமாய்க் கொண்டு கீழில் ச்லோகத்துக்கு சேஷமாகிறதன்று.
– சரமச்லோகத்தில் உள்ள “ஏக” என்னும் சொல்லானது உபாயம் மற்றும் உபேயம் ஆகிய இரண்டின் சேர்க்கையையும் குறிக்கும் என்று கொண்டால், இந்த ச்லோகத்தின் மூலம் “விரும்பியதை அடைதல்” என்னும் பலனும் மிகத்தெளிவாகக் கூறப்பட்டது என்று கருத்து. ஆகவே கீதை (18-65)ல் கூறப்பட்ட கருத்தானது, இந்த ச்லோகத்தில் கூறப்பட்ட “இலக்கைத் தடுக்கும் விரோதிகளை நீக்குதல்” என்னும் கருத்து மற்றும் “ஏக” என்னும் சொல்லில் உள்ள விளக்கமான கருத்து ஆகியவற்றாலும் வெளிப்படுகிறது. ஆகவே சரமலோகமானது, இதற்கும் முந்தைய ச்லோகத்தின் “பொருள் விளக்கம்” என்று கருதி, அதன் எஞ்சிய பாகமே ஆகும் எனக் கூற இயலாது.